சிவில் சர்வீசஸ் முதல் நிலை தேர்வு மையமாக, கோவை விரைவில்அறிவிக்கப்படும்,'' என்று மத்திய அமைச்சர் நாராயணசாமி கூறினார். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 25, 2013

சிவில் சர்வீசஸ் முதல் நிலை தேர்வு மையமாக, கோவை விரைவில்அறிவிக்கப்படும்,'' என்று மத்திய அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணைய (ஸ்டாப் செலக்ஷன் கமிஷன்) மண்டல இயக்குனர்களுக்கான கலந்தாய்வு கூட்டம், கோவையில் நடந்தது. இதில் பங்கேற்ற மத்திய பணியாளர் நலன் சீர்திருத்தத்துறை அமைச்சர்
நாராயணசாமி பேசியதாவது: மத்திய அரசின் பல துறையிலுள்ள "பி',"சி',"டி', பிரிவு பணியாளர்களை, எழுத்துத் தேர்வு மூலம் ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் தேர்வு செய்கிறது. 2009 ம் ஆண்டு வரை 10 லட்சம் விண்ணப்பங்கள் தேர்வாணையத்துக்கு வந்தன. 2012-2013 ம் ஆண்டில் ஒரு கோடியே 60 லட்சம் விண்ணப்பங்கள் வந்தன. இதிலிருந்து பிரசார்பாரதி, மத்திய உணவுக்கழகம் உள்ளிட்ட துறைகளுக்கு 85,000 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.தற்போது ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை அறிமுகமாகியுள்ளது. 85 சதவீத விண்ணப்பங்கள் இம்முறையிலேயே வந்து சேருகிறது. 15 சதவீத விண்ணப்பங்கள்மட்டுமே தபாலில் வந்து சேருகிறது. 2013-2014, 2014-2015 ம் ஆண்டுகளில் 2 கோடி விண்ணப்பங்கள்வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிலிருந்து 2 லட்சம் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவர். தேர்வுக்கான விடைகள், ஸ்டாப் செலக்ஷன் கமிஷனின் வெப்சைட்டில் மறுநாள் வெளியிடப்படுகிறது. தேர்வு எழுதும் போதே, விடைத்தாளின் நகல், தேர்வு எழுதுவோருக்கு வழங்கப்படுகிறது. மத்திய அரசுத் தேர்வாணையம் வெளிப்படையான நடைமுறையை மேற்கொள்கிறது. விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதற்கு, சில தேசிய வங்கிகளுடன் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் சில சமயங்களில் ஏற்படும் சைபர் கிரைம் புகார்களை சரிசெய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சிவில் சர்வீசஸ் தேர்வுக்கான முதல் நிலை தேர்வு மையம், தற்போது சென்னை மற்றும் மதுரையில் மட்டுமே உள்ளது. கல்வி நகரம் என்ற பெயர் பெற்ற கோவையும் விரைவில் தேர்வு மையமாக அறிவிக்கப்படும். இவ்வாறு, அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி