ஆசிரியர் தகுதித் தேர்வில் எந்தப் பிரிவினருக்கும் தளர்வுகிடையாது - ஆசிரியர் தேர்வு வாரியம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 27, 2013

ஆசிரியர் தகுதித் தேர்வில் எந்தப் பிரிவினருக்கும் தளர்வுகிடையாது - ஆசிரியர் தேர்வு வாரியம்.

ஆசிரியர் தகுதித் தேர்வின் தேர்ச்சி மதிப்பெண்ணில் எந்தப்பிரிவினருக்கும் தளர்வு வழங்கக் கூடாது என்பது தமிழக அரசின் கொள்கை முடிவு என சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம்
தெரிவித்துள்ளது.ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி மதிப்பெண்ணில் தளர்வு கோரும் பொது நல வழக்கு மீதான விசாரணையின்போது ஆசிரியர் தேர்வு வாரியம் இதைத் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக வழக்குரைஞர் எம்.பழனிமுத்து சென்னை உயர் நீதின்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்:தமிழகத்தில் நடைபெறும் ஆசிரியர் தகுதித் தேர்வில் அனைத்துப் பிரிவினருக்கும் ஒரே தேர்ச்சி மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வில் 5 சதவீத தேர்ச்சி மதிப்பெண் தளர்வை வழங்க வேண்டும். இதர மாநிலங்களில் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் 5 முதல் 20 சதவீதம் வரை மதிப்பெண்ணில் தளர்வு வழங்கப்படுகிறது.அதனால், தமிழகத்தில் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் பல்வேறு பிரிவினருக்கும் தகுதி மதிப்பெண் தளர்வுவழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டது.இந்த மனு, தலைமை நீதிபதி (பொறுப்பு) ராஜேஷ்குமார் அகர்வால், நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோர் அடங்கிய முதன்மை டிவிஷன் பெஞ்ச் முன்னிலையில் புதன்கிழமை (செப்டம்பர் 25) விசாரணைக்கு வந்தது.அப்போது ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனு:இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை மத்திய அரசு 2009-ஆம் ஆண்டு கொண்டு வந்தது. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை மட்டுமே ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் என இந்தச் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி, 2012-ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது.இந்தத் தேர்வில் 60 சதவீதம் மதிப்பெண் பெற்றால்தான் தேர்ச்சி பெற முடியும். தேர்ச்சி பெற்றவர்களுக்குத்தான் தகுதிச் சான்றிதழ் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பில் தெரிவித்தது.2012-ஆம் ஆண்டு ஜூலை 12-ஆம் தேதி நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வில் 0.37 சதவீதம் பேர் மட்டும் தேர்ச்சி பெற்றனர். மிகக் குறைந்த அளவில் தேர்ச்சி இருந்ததால், ஆசிரியர் தகுதி மறுதேர்வு நடத்தப்பட்டது. இதில் 2.99 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர்.ஆசிரியர் நியமனத்துக்கு ஆசிரியர் தகுதித் தேர்வே அடிப்படைஎன்பதால், அதில் தேர்ச்சி பெறுபவர்களை மட்டுமே ஆசிரியர் பணிக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்ந்தெடுக்க வேண்டும் என தமிழக அரசு வழிகாட்டி விதிமுறைகளை அறிவித்தது.ஆசிரியர் தேர்வு வாரியம் என்பது ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தும் அமைப்பு மட்டுமே. ஆசிரியர் தகுதித் தேர்வின் தகுதி மதிப்பெண்களை நிர்ணயிக்கும் தகுதி மாநில அரசுக்குத்தான் உள்ளது. தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான குறைந்த அளவு தேர்ச்சி வீதத்தை ஆசிரியர் தேர்வு வாரியம் தளர்த்த முடியாது.தமிழகத்தில் ஆசிரியராக நியமனம் செய்வதற்கு, ஆசிரியர் தகுதித் தேர்வில் 60 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். குழந்தைகளுக்கு தரமான கல்வி வழங்குவதற்காகவே இந்த தகுதி மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.ஆசிரியர் தகுதித் தேர்வுக்குரிய தகுதி மதிப்பெண்ணில் எந்தப் பிரிவினருக்கும் தளர்வு வழங்கக் கூடாது என்பது தமிழக அரசின் கொள்கை முடிவாகும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை அக்டோபர் 22-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

9 comments:

  1. Result epo varum date solunga lifela vilayadathlnga

    ReplyDelete
    Replies
    1. sir result vanthalum athilum oru villaiyattu iruku ithuke ipadi feel panna eppadi.weightagenu onna solli kammiya mark yeduthavangaluku posting poda poranga paarunga.enna purialaya trbtnpsc la compare weightage mark nu potturukanga atha open panni paarunga therium.

      Delete
    2. Y sir...wht r u saying...90 mark eduthavanga cut off athigama varutha?evlo cut off sir varudhu....ena cut off irunaha job ku chance iruku....what is ur cut off sir?

      Delete
    3. SIR FIRST U SEE TRB TNPSC WEBSITE.100ku mela eduthavanga cutoff 90ku mela eduthavangala vida kammiya irruku.ithula ena mudivu edukum trb

      Delete
  2. Hello sir...90 mark eduthavaga cutoff athikama irukunna, avanga +2, degree, la nalla score eduthurupaanga....
    This is right way for b.ed teachers posting..tet la 110 eduthalum, +2, degree olunga padiklana cutoff kamiya than agum.

    ReplyDelete
  3. Hello sir...90 mark eduthavaga cutoff athikama irukunna, avanga +2, degree, la nalla score eduthurupaanga....
    This is right way for b.ed teachers posting..tet la 110 eduthalum, +2, degree olunga padiklana cutoff kamiya than agum.

    ReplyDelete
    Replies
    1. sir ipo tetla thaan namma original capasity kaatta mudium.neenga solladra maathiri paartha weightage athigama iruntha tet examku 90 mattum vara mathiri padicha pothuma?tetla 110 eduthalum weightage athigam venumna ithil tet ku ena mathippu iruku?ipo namma tet ku thaan padika mudium ineme +2 ,bed padika mudiuma?appadina pona appointmetkum ithellam paathangala?

      Delete
  4. very gooooooooooooooooooooooood judgement ,ariukkum ,jathikkum sambandham kidaiyadhu ,5% mark sc ,st ku kuracha mbc ku 10% kurakanum because nanga scholrship vangamale padichittu irukkom, mark kuraikave kudadhu only 90 mark standard.not change govt.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி