ஆசிரியர் தகுதி தேர்வில் இடஒதுக்கீடு அடிப்படையில் மதிப்பெண் வழங்க முடியாது: ஐகோர்ட்டில் தமிழக அரசு பதில் மனு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 25, 2013

ஆசிரியர் தகுதி தேர்வில் இடஒதுக்கீடு அடிப்படையில் மதிப்பெண் வழங்க முடியாது: ஐகோர்ட்டில் தமிழக அரசு பதில் மனு.

ஆசிரியர் தகுதி தேர்வில் இடஒதுக்கீடு அளிக்க முடியாது என்று ஐகோர்ட்டில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் பழனிமுத்து பொது நலன் மனுதாக்கல்செய்தார். அதில்,
''ஆசிரியர் தகுதி தேர்வில் தாழ்த்தப்பட்டோர்,பிற்படுத்தப்பட்டோர்,பழங்குடியினர்,மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு அடிப்படையில் மதிப்பெண் வழங்க வேண்டும். இது தொடர்பான தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் அறிக்கையில்,ஏற்கனவே மாநில அரசுகள் தகுதிதேர்வில் இடஒதுக்கீடு முறையை பின்பற்றலாம் என்று கூறியுள்ளது. அதன் அடிப்படையில் ஆந்திரா,ஒடிசாவில் இடஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. தமிழக அரசும் இந்த முறையை பின்பற்ற உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி (பொறுப்பு) ராஜேஷ்குமார்அகர்வால் நீதிபதி சத்திய நாராயணன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலாளர் வசுந்தராதேவி பதில் மனுதாக்கல் செய்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:–ஆசிரியர் தகுதி தேர்வில் ஜாதி ரீதியான பாகுபாடு அடிப்படையில் மதிப்பெண் வழங்க முடியாது என்று தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது. இந்த தேர்வில்60சதவீதம் மதிப்பெண் பெறவேண்டும் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.குழந்தைகளுக்கு தரமான கல்வி வழங்குவதற்காக தகுதி தேர்வில்60சதவீதம் தேர்ச்சி பெற்றால்தான் வேலை வாய்ப்பு என்ற கொள்கை முடிவில் அரசு சமரசம் செய்து கொள்ளாது.எனவே இடஒதுக்கீடு அடிப்படையில் தகுதி தேர்வில் மதிப்பெண் வழங்க தேவையில்லை.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து விசாரணையை அக்டோர்22–ந்தேதிக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

9 comments:

  1. Pg trb il ida othukidu unda

    ReplyDelete
  2. Did you know zoology cutoff marks my friend got 92 marks

    ReplyDelete
  3. Trb pg tamil judgement 1october hereing

    ReplyDelete
  4. WILL u know botany cutoff details send mail with marks & community to m.chinna491@gmail.com

    ReplyDelete
  5. தமிழ்ப் பாடத்துக்கு மறுதேர்வு: அரசின் கருத்தைத் தெரிவிக்க நீதிமன்றம் மீண்டும் உத்தரவு

    முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வில், எழுத்துப் பிழையான கேள்வித்தாள் இருந்த தமிழ்ப் பாடத்துக்கு மறுதேர்வு நடத்துவது குறித்து மீண்டும் அரசின் கருத்தை அறிந்து தெரிவிக்குமாறு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

    மறுதேர்வு நடத்துவது தொடர்பாக சில யோசனைகளைத் தெரிவித்த நீதிபதி எஸ்.நாகமுத்து, இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
    இந்த வழக்கு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, மறுதேர்வு நடத்துவது குறித்து அரசின் கருத்தை அறிந்து தெரிவிக்குமாறு உத்தரவிட்டிருந்தார். மொத்தம் உள்ள 150 கேள்விகளில், பிழையான 40 கேள்விகளை நீக்கிவிட்டு 110 மதிப்பெண்களுக்கு மதிப்பீடு செய்வதாக செவ்வாய்க்கிழமை நடந்த விசாரணையின்போது அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கில் புதன்கிழமை இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

    இந்நிலையில், புதன்கிழமை விசாரணையின்போது மறுதேர்வு நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து நீதிபதி கேள்வி எழுப்பினார்.
    தேர்வு நடத்தப்பட்ட 150 கேள்விகளில், பிழையாக உள்ள 40 கேள்விகளை நீக்கிவிட்டு
    110 மதிப்பெண்களுக்கு மதிப்பீடு செய்வதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், பிழையான 40 கேள்விகளுக்கு சரியான பதிலை அளித்திருப்பவரின் நிலையை எண்ணிப் பார்க்க வேண்டும். இவ் வழக்கில் அளிக்கப்படும் உத்தரவு, தேர்வு எழுதியவர்களில் ஒரு நபருக்குக் கூட பாதிப்பை ஏற்படுத்திவிடக் கூடாது என்பதற்காகவே அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது.

    மாற்று கேள்வித்தாள் தயாராக உள்ளது; அதை அச்சிடுவதற்கு 4 வாரங்கள் ஆகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மறுதேர்வு நடத்தப்படும் நிலையில், கேள்வித்தாள் அச்சிடுவது, தேர்வு நாள் குறித்து அறிவிப்பு வெளியிடுவது மட்டுமே செய்ய வேண்டியுள்ளது. ஏனெனில், ஏற்கெனவே நுழைவுச்சீட்டு வழங்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால், தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். இப்போதைய சூழலில் 110 மதிப்பெண்களுக்கு மதிப்பீடு செய்வது என்றாலும், உடனடியாகச் செய்துவிட முடியாது. அதற்கும் கால அவகாசம் தேவைப்படும்.

    ஆகவே, மேற்குறிப்பிட்ட தகவல்களைக் கூறி, மறுதேர்வு நடத்துவது குறித்து அரசின் கருத்தை அறிந்து தெரிவிக்குமாறு அரசுத் தரப்புக்கு நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கின் விசாரணை திங்கள்கிழமைக்கு (செப்.30) ஒத்தி வைக்கப்பட்டது. விசாரணையின்போது ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர்கள் அறிவொளி, தங்கமாரி ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.

    ReplyDelete
  6. TRB RESULTA EPA VENALUM VIDUNGA SIR.TET RESULTKAKA 6 LACS TRS WAITING.PLS SIR CONSIDR DIS.

    ReplyDelete
  7. Tet result epo varum details of passed candidates percentage.please send me

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி