பெண் பாதுகாவலர்களால் பள்ளி பாதுகாப்பில் தொய்வு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 28, 2013

பெண் பாதுகாவலர்களால் பள்ளி பாதுகாப்பில் தொய்வு.

பள்ளிகளில் நியமிக்கப்பட்ட பெண் பாதுகாவலர்களுக்கு பதில் இரவில் பாதுகாப்பு பணியை உறவினர்கள் மேற்கொள்கின்றனர்.தமிழகம் முழுவதும் உயர், மேல்நிலை பள்ளிகளில், இரவு நேர பாதுகாப்பிற்காக,
மாவட்ட டி.இ.ஓ.,சி.இ.ஓ.வால், ஆண், பெண் பாதுகாவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இரவு நேர பாதுகாவலுக்காகத்தான், இவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 120 மேல்நிலை,110 உயர்நிலை பள்ளிகளில், 50 சதவீத பாதுகாவலர்கள் பெண்களே நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களை பள்ளி நிர்வாகங்கள்,வேறு வேலைக்கு பயன்படுத்திக் கொள்கின்றனர். பியூன் இல்லாத பள்ளிகளில்,அந்த வேலையை பாதுகாவலர்கள் கவனித்து வருகின்றனர்.காலை 9 மணிக்கு வரும் இவர்கள், மாலை 6 மணிக்கு வீட்டுக்கு சென்று விடுகின்றனர். இரவு பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதில்லை. ஆண் பாதுகாவலர்களின் நிலை இவ்வாறு இருக்கும் போது, பெண் பாதுகாவலர்கள், இரவில் பள்ளிகளில் உறவினர்களை தங்க வைக்கின்றனர்.நியமிக்கப்பட்ட பெண் பாதுகாவலர்கள் தங்க முடியாத நிலை ஏற்பட்டால் அதிகாரியின் அனுமதி பெற்று அந்த பாதுகாவலரின் கணவர் தங்கலாம். லேப்டாப், ஆய்வக பொருட்கள் மற்றும் பல்வேறு விலையுயர்ந்த பொருட்கள் பள்ளிகளில் இருப்பதால், இவற்றின் பாதுகாப்பில் தொடர்ந்து தொய்வு நீடிக்கிறது.தலைமை ஆசிரியர் ஒருவர் கூறும்போது: பள்ளிகளில் நியமிக்கப்பட்ட பாதுகாவலர்கள், ஆசிரியர் போன்று, காலை 9 மணிக்கு வந்து ஐந்து மணிக்கு சென்று விடுகின்றனர். அரசியல்வாதிகளின் சிபாரிசால் வரும் இவர்களை, நாங்கள் கட்டுப்படுத்தினால் உடனே, சி.இ.ஓ., டி.இ.ஓ.,விடம் சொல்லி விடுவதாக மிரட்டுகின்றனர்.ஆண்கள் பள்ளிக்கு பெண் பாதுகாவலர்கள் நியமிக்கின்றனர். பெண்கள் என்பதால்,இவர்களை இரவு நேர பணிக்கு உட்படுத்த முடிவதில்லை. பொருட்கள் ஏதாவது தொலைந்து விட்டால், தலைமை ஆசிரியர்கள் தலையில்தான் விழுகிறது, என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி