டி.ஆர்.பி., தலைவரை சஸ்பெண்ட் செய்ய ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 27, 2013

டி.ஆர்.பி., தலைவரை சஸ்பெண்ட் செய்ய ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்.

தமிழை அலட்சியப்படுத்தியதற்காக, டி.ஆர்.பி., தலைவரை, சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என, தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம், கோரிக்கை விடுத்து உள்ளது.சங்கத்தின் பொதுச்செயலர், மீனாட்சிசுந்தரம்
வெளியிட்ட அறிக்கை: முதுகலை தமிழாசிரியர் தேர்வில், 47 கேள்விகள், தவறாகவும், பிழையாகவும் அச்சிடப்பட்டுள்ளன; இதனால், கேள்விகளின் அர்த்தமே மாறிவிட்டன. சில கேள்விகளை, புரிந்துகொள்ள முடியாத அளவிற்கு, அதிக எழுத்துப் பிழைகள் இருந்தன. காங்கிரஸ் என்பதை, காதுரஸ் என்றும், அவுரங்கசீப் என்பதற்கு, அவுரதுசீப் என்றும், கணியன் பூங்குன்றனார் என்பதை, கனியன் பூதுகுன்றனார் என, பிழைகள் நீள்கின்றன.தமிழகத்தில் உள்ள ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வில், 150க்கு, 47 கேள்விகள் தவறாக கேட்கப்பட்டது, அதிர்ச்சி அளிக்கிறது. இது தொடர்பான வழக்கில், தமிழ் பாட தேர்வை, 8,000 பேர் தான் எழுதினர்; அது, பெரிய எண்ணிக்கை இல்லை என்று, டி.ஆர்.பி., தலைவர் விபு நய்யார் கருத்து தெரிவித்துள்ளார்.பிழையில்லாத கேள்வித்தாள் தயாரிக்க முடியாத, டி.ஆர்.பி., தலைவர்,அந்த பதவியை வகிப்பதற்கான தகுதியை இழந்துவிட்டார். எனவே, அவரை, உடனடியாக, சஸ்பெண்ட் செய்து, விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

10 comments:

  1. Unga panchayatai apparama vachukonga.first enga resulta podunga.idu enga life.

    ReplyDelete
  2. Porattam perani nu busya irukkumbodhu tamila kappatha neenga yedukkura step........pullarikkudhu.
    Neengalum tamila kappatha kilambiteenga......appadi yennasir kobam ungalukku.......

    ReplyDelete
  3. Buildup panrano peela vidureno adhellam mukkiyamillai.....
    Nadarithanam pannalum nasukka pannanum......
    Innumada indha ooru nammala nambittu irukku....
    Yenna sir supera comedy panreenga....
    PG TAMIL MELA appadi yenna akkarai
    Indha problem arambichu yevlo nalachu......

    ReplyDelete
  4. Apa unga resulta mattum than pakiringa

    ReplyDelete
  5. Hai friends.....last year unfilled subject wise vacancy list is given here..... 1)tamil.............483, (2)English.............1825,(3)maths...........1299,(4)physics.............1044,(5)chemistry(6)810,(7)Botany............(8)zoology........548,(9)history...........3122,(10)geography.........1001,(11)others.......19. Frnds this is last year unfilled vacancy list only...but this year subject wise vacancy list is yet to be announced....

    ReplyDelete
    Replies
    1. Frnds dont get confused the sixth one given is chemistry only...6 number is mistakenly typed...

      Delete
  6. Tntet result epo varum

    ReplyDelete
  7. Economics vacancy evlonu sollunga friend s

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி