தேனி மாவட்டத்தில் புதிதாக அரசு செவிலியர் கல்லூரி ரூ.10 கோடி செலவில் அமைக்கப்படுகிறது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 17, 2013

தேனி மாவட்டத்தில் புதிதாக அரசு செவிலியர் கல்லூரி ரூ.10 கோடி செலவில் அமைக்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் தற்போது சென்னை மருத்துவக்கல்லூரி, மதுரை மருத்துவக்கல்லூரி, சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி, செங்கல்பட்டு மருத்துவக்கல்லூரி ஆகிய 4 கல்லூரிகளில் பி.எஸ்சி.நர்சிங் படிக்க தலா 50 இடங்கள் உள்ளன. தற்போது தேனி மாவட்டம் பெரியகுளத்தில் புதிதாக செவிலியர் கல்லூரியை தொடங்க அரசு ரூ.10 கோடியே 15 லட்சத்தில் அமைக்க அரசு ஆணையிட்டுள்ளது. இந்த கல்லூரியில் வருடந்தோறும் 50 மாணவர்கள் வீதம் அனுமதிக்கப்படுவார்கள்.இந்த புதிய கல்லூரியில் கல்லூரி கட்டிடம் மற்றும் செவிலியர் விடுதி கட்டிடம் கட்ட ரூ.7 கோடியே 75 லட்சம் செலவிடப்பட உள்ளது.மரச்சாமான்கள், மோட்டார்வாகனங்கள் மற்றும் கருவிகள் வாங்க ரூ.2கோடியே 40 லட்சம் செலவழிக்கப்பட இருக்கிறது.இந்த தகவலை தமிழ்நாடு மருத்துவக்கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி