தமிழக அரசுப் பணியில் ஏ,பி,சி,டி என்ற4பிரிவுகளில்,அதிகாரிகள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை வேலை பார்க்கின்றனர்.4பிரிவுகளிலும் சேர்த்து 13லட்சத்து30ஆயிரம் பேர் பணி புரிகின்றனர்.இதுதவிர, 5லட்சத்து20ஆயிரம்
பேர் ஓய்வு பெற்று பென்ஷன் பெற்று வருகின்றனர். இந்த நிலையில்,அடுத்த6மாதத்திற்குள்,குறிப்பாக2014-ம் ஆண்டு மார்ச் மாத இறுதிக்குள்,மொத்த ஊழியர்களில்20சதவீதம் பேர் ஓய்வுபெற இருக்கின்றனர். அதாவது, 2லட்சத்திற்கும் மேலான அரசு ஊழியர்கள்,ஆசிரியர்கள் ஓய்வு பெறுகின்றனர். இதனால்,மற்றவர்களுக்கு பணிச் சுமை அதிகமாகும்.அரசுக்கு தற்போதுள்ள நிதிச் சுமையால்,ஒரே நேரத்தில் காலிப்பணியிடங்களை நிரப்ப முடியாத நிலை உள்ளது. கொஞ்சம் கொஞ்சமாக பணியாளர் தேர்வு நடத்தி,காலிப் பணியிடங்களை நிரப்ப முடியும்.ஆனால்,ஒரு சில பிரிவுகளில் காலி பணியிடங்களை ஒரே நேரத்தில் நிரப்ப வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால்,அந்தப் பிரிவுகளில் கம்ப்யூட்டர்,பேக்ஸ்,மொபைல் போன் போன்ற வசதிகள் இருக்கின்றன. அதனால்,முன்பு இருந்த அளவு பணியாளர்கள் தேவையில்லை.மேலும்,பென்ஷன் தாரர்கள் எண்ணிக்கையில் ஓய்வுபெறும் இந்த2லட்சம் பேர் சேரும் நிலையில்,மேலும் அதே அளவு பணியாளர்கள் வேலைக்கு சேர்க்கப்பட்டால் நிதிச்சுமை மேலும்அதிகமாகும். இதே அளவிலான பணியாளர்கள்2016-ம் ஆண்டும் ஓய்வுபெற உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தத் தகவலை என்.ஜி.ஓ. சங்க முன்னாள் தலைவர் கோ.சூரியமூர்த்தி தெரிவித்தார்.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி