இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழ்நாட்டில் 2 அரசுப் பள்ளிகளில்மேகவழிக்கல்வி முறை (கிளவுட் கம்ப்யூட்டிங்) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மேகவழிக்கல்வி முறை
மேகவழிக் கல்வி முறை என்பது கணினிகளின் இணைப்புகள் மூலம் மாணவர்களின் அறிவுத்திறனை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு புதுமையான கல்விமுறை ஆகும். இதன்மூலம் மாணவர்கள் தாங்கள் படிக்கும் பள்ளியிலிருந்தபடியே எந்த ஒரு பள்ளியோடும் அதன் மாணவர்களுடனும் பாடங்களை பகிர்ந்துக் கொள்ள முடியும். தங்களின் பாடங்கள் சம்மந்தமான தகவல்களை அவர்கள் பள்ளியில் உள்ள கணினி, மடிக்கணினி,செல்பேசி ஆகியவற்றின் மூலம் பெற்றுக்கொள்ளலாம். இதற்காக ஒரு குறிப்பிட்ட மென்பொருளை தங்களது கணினி மற்றும் செல்பேசிகளில் நிறுவிக்கொள்ள வேண்டும்.
தமிழ்நாட்டில் 2 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் மேகவழிக் கல்வி முறை திட்டத்தை செயல்படுத்த, பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டு அதற்காக லேர்னிங் லிங் பவுண்டேஷன் என்ற நிறுவனம் மற்றும் டெல் கணினி நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது.
2 அரசு பள்ளிகளில் அறிமுகம்
இதைத்தொடர்ந்து, சென்னை எம்.ஜி.ஆர். நகர் அரசு மேல்நிலைப் பள்ளி, ஸ்ரீபெரும்புதூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய இரண்டு அரசு பள்ளிகளில் அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டது.இதற்காக மேற்கண்ட இரு நிறுவனங்களும் ரூ.50 லட்சம் மதிப்புள்ள 11 மடிக்கணினிகள், 13 கையடக்க கணினிகள் ஆகியவற்றை இரு அரசுபள்ளிகளுக்கு வழங்க முன்வந்தன. அதுமட்டுமல்லாமல் இந்த புதிய தொழில்நுட்பம் குறித்து மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க ஒரு தொழில்நுட்ப உதவியாளரையும் பணியமர்த்தின.
இந்தியாவில் முதல்முறை
இந்த நிலையில், மேகவழிக்கல்வி முறையை சென்னை எம்.ஜி.ஆர். நகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் உயர்கல்வித்துறை அமைச்சர் பி.பழனியப்பன் வியாழக்கிழமை தொடங்கி வைத்தார். மடிக்கணினிகளையும், கையடக்க கணினிகளையும், சமூகநலத்துறை அமைச்சர் பா.வளர்மதி வழங்கினார்.பள்ளியில் மேகவழிக்கல்வி முறை அறிமுகப்படுத்தப்படுவது இந்தியாவிலேயே இதுதான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியில், பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் டி.சபீதா, பள்ளிக் கல்வி இயக்குனர் வி.சி.ராமேஸ்வரமுருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி