பள்ளி துவங்கி, முடியும் நேரத்தில் கூடுதல் பஸ் இயக்க ஆசிரியர்கள் கோரிக்கை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 17, 2013

பள்ளி துவங்கி, முடியும் நேரத்தில் கூடுதல் பஸ் இயக்க ஆசிரியர்கள் கோரிக்கை.

பள்ளி துவங்கி, முடியும் நேரத்தில் கூடுதல் பஸ் இயக்க வேண்டும் என்று கொள்ளிடம் வட்டார ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தி உள்ளது. தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின், கொள்ளிடம் வட்டார
செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. வட்டார தலைவர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். செயலாளர் பாலசுந்தர் வரவேற்றார். துணை செயலாளர்கள் ராஜேஷ், ஜெயலெட்சுமி முன்னிலை வகித்தனர். மாவட்ட துணை செயலாளர் விஜயகுமார், தலைமையாசிரியர்கள் ரமாமணி, ஜெயபாரதி, பட்டதாரிஆசிரியர்கள் முத்துவேல் ஆறுமுகம் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் 1996 முதல் அனைத்து ஆசிரியர்களின் டி.பி.எப்.கணக்கு சீட்டுகளை சரி செய்து வழங்கிட வேண்டும்.மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட 10 சதவிகித பஞ்சப்படி உயர்வை தமிழக அரசு உடன் வழங்க வேண்டும். பள்ளி மாணவர்களின் நலன்கருதி பள்ளி துவங்கும் நேரம் மற்றும் முடியும் நேரங்களில் கூடுதல் பஸ் இயக்க வேண் டும். சீர்காழி புறவழிச்சாலையில், இரவு நேரங்களில் விபத்துக்களை தவிர்க்கும் வகையில் மின்விளக்குகள் அமைக்க வேண்டும். அரசூர் ரயில்வே மேம்பால பணியை விரைந்து முடிக்க வேண்டும்.கொள்ளிடம் பகுதியில், பாசனத்திற்கு முறை வைக்காமல் தண்ணீர்திறந்து விடவேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.முடிவில் ஊழியர் சங்க வட்ட செயலாளர் கலைச்செல்வன் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி