காலவரையற்ற உண்ணாவிரதம்: பகுதி நேர ஆசிரியர்கள் அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 17, 2013

காலவரையற்ற உண்ணாவிரதம்: பகுதி நேர ஆசிரியர்கள் அறிவிப்பு.

பகுதி நேர ஆசிரியர்களை, முழு நேர ஆசிரியர்களாக பணியமர்த்தக் கோரி, காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளனர். தமிழ்நாடு அனைத்து பகுதி நேர ஆசிரியர்கள் சங்க மாநிலத் தலைவர் ராமர், சேலத்தில்
நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக அரசு, ஆண்டு மார்ச், 5ம் தேதி தமிழகம் முழுவதும், 16, 549 பேரை பகுதி நேர ஆசிரியர்களாக நியமனம் செய்தது. மாதந்தோறும், 5,000 ரூபாய் சம்பளம் என்றும், வாரத்தில் மூன்று அரை நாள் பணி செய்ய வேண்டும் என்றும், அரசாணை வெளியிட்டது. காலப்போக்கில், பள்ளி தலைமையாசிரியர்கள், எங்களை முழுநேர ஆசிரியராகவே பயன்படுத்துகின்றனர். குறிப்பாக, கம்ப்யூட்டர்ஆசிரியர்களை முழுநேர ஆசிரியர்களாக பணியாற்றுமாறு, அனைத்து பள்ளிகளிலும் கட்டாயப்படுத்துகின்றனர். ஆனால், 5,000 ரூபாய் மட்டுமே சம்பளம் வழங்கப்படுகிறது. எனவே, எங்களை முழுநேர ஆசிரியர்களாக, அரசு நியமிக்க வேண்டும்.சேலம், நெய்க்காரப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில், பகுதிநேர ஆசிரியர் சக்திவேல் பணிபுரிந்து கொண்டிருந்த போது, மாரடைப்பால் மரணமடைந்தார். இவரது குடும்பத்துக்கு, தமிழக அரசு, முதல்வர் நிவாரண நிதி வழங்க வேண்டும். பகுதி நேர ஆசிரியர்களுக்கு, ஊதிய பட்டியல் வருவதில் தாமதம் ஏற்படுகிறது. எனவே, அனைத்து தலைமையாசிரியர்களுக்கும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உரிய நேரத்தில் ஆவணத்தை கொடுக்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன், இந்த மாத இறுதியில், காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

1 comment:

  1. ஒன்றுபடுவோம் வெற்றிபெருவோம்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி