1,821 இடைநிலை ஆசிரியர்கள், 11,922 பட்டதாரி ஆசிரியர்கள், 2,881 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் ஆசிரியர்கள் விரைவில் நியமனம் - பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 14, 2013

1,821 இடைநிலை ஆசிரியர்கள், 11,922 பட்டதாரி ஆசிரியர்கள், 2,881 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் ஆசிரியர்கள் விரைவில் நியமனம் - பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர்.


அரசுப் பள்ளிகளில் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களை நியமிப்பதற்கான நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் இவர்கள் பணி நியமனம் செய்யப்படுவார்கள் என பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர்
டி.சபிதா கூறினார்.சென்னை சாந்தோம் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் குழந்தைகள் தின விழா மற்றும் சிறந்த நூலகர்களுக்கான டாக்டர் எஸ்.ஆர்.அரங்கநாதன் விருது வழங்கும் விழா இன்று (14.11.2013 வியாழக்கிழமை) நடைபெற்றது.

இந்த விழாவில் அவர் பேசியது:

தமிழக அரசு கடந்த 2 ஆண்டுகளில் 51 ஆயிரம் ஆசிரியர்களை நியமித்துள்ளது.மேலும் 1,821 இடைநிலை ஆசிரியர்கள், 11,922 பட்டதாரி ஆசிரியர்கள், 2,881 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளன.இந்த ஆசிரியர்கள் விரைவில் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர்.அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதில் ஏற்படும் தாமதத்தால் மாணவர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தாற்காலிக ஆசிரியர்களை நியமிக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.மலைப்பகுதிகள், தொலைதூர கிராமங்களில் உள்ள மாணவர்கள் பள்ளிக்குச் சென்று வரும் வசதிகளை ஏற்படுத்தித் தருவதற்காக ரூ. 1.40 கோடி இந்த ஆண்டு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதன்மூலம் 4,500 மாணவர்கள் பயனடைவர்.குழந்தைகளுக்கான பிரத்யேக நூலகம் இப்போது கோவையில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 54 புதிய தொடக்கப் பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளன. 50 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும், 100 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளன.இந்த 100 பள்ளிகளுக்காக 900 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும், 100 தலைமையாசிரியர் பணியிடங்களும் உருவாக்கப்பட்டுள்ளன என்றார் சபிதா.

கலை நிகழ்ச்சிகளில் சிறந்து விளங்கியகுழந்தைகளுக்கான விருதுகள், சிறந்த நூலகர்களுக்கான எஸ்.ஆர்.அரங்கநாதன் விருது, அதிக உறுப்பினர்களைச் சேர்ந்த நூலகங்களுக்கான விருதுகள் உள்ளிட்டவற்றை பள்ளிக் கல்வி அமைச்சர் கே.சி.வீரமணி வழங்கினார்.அதிக உறுப்பினர்களைச் சேர்த்ததற்காக திருப்பூர் மாவட்ட மைய நூலகத்துக்கும், அதிக புரவலர்களை சேர்த்ததற்காக திருவண்ணாமலை மாவட்ட மையநூலகத்துக்கும் விருது வழங்கப்பட்டது.முன்னதாக, பள்ளி மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.அனைவருக்கும் கல்வித் திட்ட இயக்குநர் பூஜா குல்கர்னி, பள்ளிக் கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன், தொடக்கக் கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன், அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்ட இயக்குநர் ஏ.சங்கர், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் எஸ்.கண்ணப்பன், மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் ஆர்.பிச்சை உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

24 comments:

  1. tet pass anavangalukku eppa sir cv nadakkum?

    ReplyDelete
  2. sir i got 89 in paper2, any changes in final answer key.amma thaye(trb) 1 mark podungamma!!!!!!!

    ReplyDelete
  3. Replies
    1. what is your cut off

      Delete
    2. my weightage is 75. tirupur dist. what is your weightage and district?

      how many persons passed in maths? and how many vacancies are in district wise?

      Delete
    3. my cut off is 82

      Delete
  4. first evvaluvu vacancies nu sollunga.athuku appuaram trb exam vachu cutoff fix panni postings podalam.eppo verum 1800 second grade teacher vacant solrenga.aana pass pannavanga 12000 candidates.appo remaining kastapattu padichu pass pannathu waste..onnu purinchukinga kasataptta kandippa palan kidaikkanum.athan engalukku nallathu.ellana engalukku ematram than mitcham ada pongappa neengalum unga tet examum.

    ReplyDelete
    Replies
    1. passing candidate 12000 but vacancy 1823 itself......only few persons get a job who finished dted before 2006

      Delete
    2. sgt 1800 posting but already 540 canditates for last year tet c.v. missing students are waiting there so 1300 posting than for this year stutents so i think 2003 dted canditates are get jo

      Delete
  5. tnpsc mathiri vacancies yevvalavunnu first sollittu then exam vachi posting poda vendiyathuthana? atha vittuttu muthalil 15000 last year vacancies nnum this year innum athikam agalamnnum sollittu ippa vacancie verum 11922 than b.Ed kkunnum solli kastappattu padichavangala yematharathe intha TRB yoda velai akiduchu.

    ReplyDelete
    Replies
    1. When will come pg final selection list ... anybody knows pl update

      Delete
  6. h m vacancy in english .

    ReplyDelete
  7. When will come pg final selection list ... anybody knows pl update

    ReplyDelete
  8. 11922 vacancy poga balance bt teacherskku may month varapogum vacencykku ippo order kudutha athu besta irukkum please consider this

    ReplyDelete
  9. 1821 SGT Teacher Posting Ena Schoolku oru Postinga But Vacansis Athigama Iruku

    ReplyDelete
  10. i am a handihapped person.i passed paper i mark 91.my seniority 2008.my community mbc .any possibile for getting job for me.reply pls any one

    ReplyDelete
  11. hommany persons passed under differently abled quota.reply me

    ReplyDelete
  12. Expected that all pg trb pending writs are cleared or disposed on nov 18th mon. On the same date or shortly provisional sel list of all pg subjects shal b published.

    Though the pg tam case no & its details-(weekly cause status for 1 week) r not mentioned in the madurai high court official site, there is high possibility for pg tamil case to get finalised by nov 18th & 19th. Both the madurai bench judges those who deals tamil case present for mon & tue. In particular their bench functions only on coming mon & tue. Hearing on nov 12th postponed due to the deptation of judge Jaichandran without next date. Since their bench availabl only for mon & tue, pg tam case wil come to an end by analysing opponent thoughts.

    All pg tam candidates prays the court to finalise the issue in quick & provide judhement to TRB to publish PG Tamil result by next week. Judgement to b given for PG Tamil wil b indifferent but it wil b the acceptable right solution for B series & A C D series also.

    Right solution as Grace marks or star for minimum few qns in B series which has higher spelling mistakes wil b provided by the subject expert committee would b submitted by TRB in their higher appeal.

    Anyway pg tam result wil b expected soon & get appointed with all subjects as the above news by school edn secretary confirms...

    ReplyDelete
  13. Friends I scored89 in tet
    Next time I want to score more Mark's what are the book's for psychology and English?help me anybody

    ReplyDelete
  14. Paper2 la pass pana 14000perla gvt teachersm iruka chance iruku. Am i correct?

    ReplyDelete
    Replies
    1. hmmm irukalam... avanga join pannalena namaku posting kidaika vaaipu iruku

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி