பிளஸ் 2 மாணவர்களுக்கான மாதிரி வினா புத்தகங்கள் மற்றும் தீர்வுப் புத்தகங்கள் ஆகியவை நவம்பர் 20-ம் தேதி முதல் விற்பனை செய்யப்பட உள்ளன. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 13, 2013

பிளஸ் 2 மாணவர்களுக்கான மாதிரி வினா புத்தகங்கள் மற்றும் தீர்வுப் புத்தகங்கள் ஆகியவை நவம்பர் 20-ம் தேதி முதல் விற்பனை செய்யப்பட உள்ளன.


தமிழ்நாடு மாநிலப் பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்காக மாதிரி வினா புத்தகங்கள் மற்றும் தீர்வுப் புத்தகங்கள் ஆகியவை அச்சிடப்பட்டு குறைந்த விலைக்கு
விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் மாணவர்களுக்கான புத்தகங்கள் அச்சிடப்பட்டு உள்ளன. இந்தப் புத்தகங்களுக்கு ரூ.25 முதல் ரூ.95 வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

புத்தகங்கள் விற்பனை செய்யப்படும்மாவட்ட மையங்களின் விவரம்:

1. சென்னை - அரசு மேல்நிலைப் பள்ளி, எம்.எம்.டி.ஏ. காலனி, அரும்பாக்கம், ஜெய்கோபால் கரோடியா மகளிர் மேல்நிலைப் பள்ளி, சைதாப்பேட்டை, இ.எல்.எம். ஃபேப்ரிசியஸ் மேல்நிலைப் பள்ளி, புரசைவாக்கம்,எம்.சி.சி. மேல்நிலைப் பள்ளி, சேத்துப்பட்டு, ஜெய்கோபால் கரோடியா மகளிர்மேல்நிலைப் பள்ளி, சூளைமேடு.

2. காஞ்சிபுரம் - அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, குரோம்பேட்டை.

3. திருவள்ளூர் - ஆர்.எம். ஜெயின் அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளி,திருவள்ளூர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி