அரசு உயர்நிலை, மேனிலைப் பள்ளிகளில் 2000 தமிழாசிரியர் பணியிடங்கள் காலி. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 27, 2013

அரசு உயர்நிலை, மேனிலைப் பள்ளிகளில் 2000 தமிழாசிரியர் பணியிடங்கள் காலி.


அரசு உயர்நிலை,மேனிலைப் பள்ளிகளில்2000 தமிழாசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. பள்ளிக் கல்வித்துறையின் குளறுபடியால் பத்தாம் வகுப்பு,பிளஸ்2மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் அரசு உயர்நிலைப் பள்ளிகள்2700,
மேனிலைப் பள்ளிகள் 2800 இயங்கி வருகின்றன. இந்த ஆண்டில் மட்டும் சுமார்10 லட்சம் மாணவர்கள் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்2 வகுப்புபடித்து பொதுத் தேர்வு எழுத உள்ளனர். ஆனால் இப் பள்ளிகளில்2000தமிழாசிரியர் பணியிடங்களை நிரப்புவதில், இரண்டு விதமான அரசு உத்தரவுகள் இருப்பதை காரணம் காட்டி பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் இடங்களை நிரப்பாமல் உள்ளனர்.உயர்நிலை மேனிலை பள்ளிகளில் உள்ள வகுப்புகளில் ஒவ்வொரு பாடத்துக்கும் ஒருபாட ஆசிரியர் வீதம் நியமிக்க வேண்டும் என்று மத்திய இடைநிலைக் கல்வி திட்டத்தின் கீழ் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதில் பாடங்களில் உள்ள உள்பிரிவுகளையும் கருத்தில் கொண்டு அதற்கு ஏற்ப ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

இதன்படி அறிவியல் பாடத்துக்கு இயற்பியல்,வேதியியல்,உயிரியல்,விலங்கியல் என்ற உள்பிரிவுகளை கருத்தில் கொண்டும்,சமூக அறிவியல் பாடத்தில் வரலாறு,புவியியல்,பிரிவுகளை கருத்தில் கொண்டும் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆனால் மொழிப்பாடங்களை பொருத்தவரை ஆங்கிலத்துக்கு தனியாக ஆசிரியர் நியமிக்க வேண்டும். அதேசமயம் தமிழாசிரியர் பணியிடங்களை நிரப்பும் போது குழப்பங்களை அதிகாரிகள் செய்து வருவதாக தமிழாசிரியர்கள் குற்றம்சாட்டுகின்றனர். பதவி உயர்வு மூலம் தமிழாசிரியர்கள் நியமிக்கும் போது, 1988ல் போடப்பட்ட அரசு உத்தரவு686ல் கூறப்பட்டு அம்சங்களை பின்பற்ற வேண்டும் என்று தமிழாசிரியர்கள் கேட்கின்றனர். அதன்படி பி.டி ஆசியர்களுக்கு பதவி உயர்வு வழங்கும் போது,பணியில் சேர்ந்தகாலத்தை பணி மூப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதைப்பின்பற்றி அனைத்து பாட ஆசிரியர்களுக்கும் பதவி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது.ஆனால் பிடி தமிழாசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கும் போது மட்டும்2007ல் போடப்பட்ட அரசு உத்தரவு161ஐ காரணம் காட்டி பதவி உயர்வுவழங்க மறுப்பதாக தமிழாசிரியர்கள் கூறுகின்றனர்.

161அரசு உத்தரப்படி பி.எட் அல்லது பி.லிட் முடித்திருந்தால் மட்டுமே பதவி உயர்வு வழங்கப்படும் அல்லது நேரடியாக தமிழாசிரியர் பணி வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை கூறுகிறது. இதனால் உயர்நிலைப் பள்ளிகளில்1200தமிழாசிரியர் பணியிடங்களும்,மேனிலைப் பள்ளிகளில்600தமிழாசிரியர் பணியிடங்களும் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன.இந்த பிரச்னை குறித்து தமிழாசிரியர்கள் அரசிடம் பேச்சு வார்த்தை நடத்தியும் பயன் இல்லாமல் போனதால் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்நிலையில் அனைத்து பிரிவுகளிலும் பதவி உயர்வு மற்றும்நேரடி பணி நியமனம் என (தமிழாசிரியர்கள் உள்பட)13450ஆசிரியர் பணியிடங்கள் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ளன. குறிப்பாக மொழிப்பாடத்தில்தமிழாசிரியர்கள் இல்லாமல் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்2மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பொதுத் தேர்வை கருத்தில் கொண்டு தமிழாசிரியர்களை நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி