தொடக்க, உயர்நிலை ஆசிரியர்களுக்கு 20ம் தேதி பயிற்சி. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 17, 2013

தொடக்க, உயர்நிலை ஆசிரியர்களுக்கு 20ம் தேதி பயிற்சி.


தமிழகத்தில் தொடக்க, உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு 20ம் தேதி பயிற்சி ஆரம்பமாகிறது. இதுகுறித்து அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தமிழகத்தில் தொடக்க, உயர் தொடக்க நிலை ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் மற்றும்
ஆசிரிய பயிற்றுனர்களுக்கு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், அனைவருக்கும் கல்வி இயக்கமும் இணைந்து பணியிடை பயிற்சிகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.தொடக்க மற்றும் உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு குறு வள மைய அளவில் டிசம்பர் மாதம் 7ம் தேதி சமூக சமநில நேர்மறை எண்ணங்களை வளர்த்தெடுத்தல் என்ற தலைப்பில் பயிற்சி வழங்கப்படுகிறது. இதற்காக மாநில மற்றும் மாவட்ட அளவிலான கருத்தாளர் பயிற்சி சென்னையில் வரும் 20ம் தேதி நடக்கிணறது. இதில் ஒரு மாவட்டத்திற்கு 2ஆசிரிய பயிற்றுனர்களும், 2 மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன 2 விரிவுரையாளர்களும் கலந்து கொள்கின்றனர்.மாவட்ட அளவில் அனைத்து ஆசிரிய பயிற்றுனர்கள், ஆசிரிய கருத்தாளர்களுக்கு வரும் 27ம் தேதி மற்றும் 28ம் தேதி நடக்கிறது. குறு வள மைய அளவில் தொடக்க மற்றும் உயர்நிலை ஆசிரியர்களுக்கு வரும் டிசம்பர் மாதம் 7ம் தேதி பயிற்சி நடத்தப்படுகிறது. இவ்வாறு அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி