இளநிலை உதவியாளர், நில அளவர்உள்ளிட்ட குரூப் - 4 நிலையில், நிரப்பப்படாமல் உள்ள 222 பணியிடங்களை நிரப்ப 5ம் கட்ட கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு டிச., 6ம் தேதி, சென்னையில் நடக்கிறது.தமிழ்நாடு
அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.,) அறிவிப்பு: குரூப் - 4 நிலையில், இன்னும், 222 பணியிடங்கள் நிரம்பாமல் உள்ளன. இதை நிரப்ப, ஐந்தாம் கட்ட கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது. இதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களின் பதிவு எண்கள் விவரம்,http://www.tnpsc.gov.in/என்ற டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.சான்றிதழ் சரிபார்ப்பு, சென்னை, பாரிமுனையில் உள்ள தேர்வாணைய அலுவலகத்தில் டிச., 6ம் தேதி காலை 8:30 மணி முதல் நடக்கும். விண்ணப்பதாரர்கள், தங்களது அசல் சான்றிதழ்கள் மற்றும் கையெழுத்திட்ட இரண்டு ஜெராக்ஸ் பிரதிகளையும் கொண்டு வர வேண்டும். தமிழ்வழியில் படித்தவர் என முன்னுரிமை கோரினால், அதற்குரிய சான்றிதழ்களையும் கொண்டு வர வேண்டும். இவ்வாறு, தேர்வாணையம் தெரிவித்து உள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி