10 ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள்களை, திருத்தப்படும் மையங்களுக்கு கொண்டு செல்வது குறித்த, புது வழிமுறையை வகுக்க தேர்வுத்துறை ஆலோசனை
நடத்தி வருகிறது.கடந்த கல்வி ஆண்டில், 10 ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாள்கள், ரயிலில் கொண்டு செல்லப்பட்ட போது மாயமாகின. இதுகுறித்து விசாரித்து, சிலர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த சர்ச்சையை வரும் ஆண்டுகளில் தவிர்க்க தேர்வு மையத்தில் இருந்து திருத்தப்படும் மையத்திற்கு, விடைத்தாள்களை கொண்டு செல்வது குறித்து தேர்வுத்துறை ஆலோசனை நடத்துகிறது.மொத்தமாக மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கு கொண்டு வந்து, விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு வாகனங்களில் அனுப்பினால் எத்தனை ஊழியர்கள் தேவை; தபால் நிலையத்தில் இருந்து, திருத்தப்படும் மையங்களுக்கு அனுப்பாமல் தலைமை தபால் நிலையங்களில் இருந்து அனுப்பினால் பாதுகாப்பாக இருக்குமா? என ஆலோசிக்கப்படுகிறது; மேலும், கல்வி அதிகாரிகளிடமும் ஆலோசனை கேட்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி