தமிழக தேர்வுகள் மார்ச் 3ல் ஆரம்பம்? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 19, 2013

தமிழக தேர்வுகள் மார்ச் 3ல் ஆரம்பம்?


சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு மற்றும் பிளஸ்2 பொதுதேர்வுகள்,மார்ச், 1ம் தேதியில் இருந்து நடைபெறும் என,சி.பி.எஸ்.இ.,நேற்று,அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. தமிழக பொதுதேர்வுகள்,மார்ச், 3ம் தேதியில் இருந்து,
நடைபெறலாம் என,எதிர்பார்க்கப்படுகிறது.பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்2 மாணவர்கள் உட்பட,அனைத்து வகுப்பிற்கும், அடுத்தமாதம்,முதல் வாரத்தில் இருந்து,அரையாண்டுதேர்வு துவங்குகிறது.இதையடுத்து,பொதுதேர்வை நடத்துவதற்கான ஏற்பாடுகளை,தேர்வுதுறை தீவிரமாக செய்து வருகின்றன.

கடந்த ஆண்டு, 10ம் வகுப்புதேர்வை, 11லட்சம்பேரும்,பிளஸ்2தேர்வை, 8லட்சம்பேரும் எழுதினர். இந்தஆண்டு, 10ம் வகுப்பு மாணவர் எண்ணிக்கை, 11.50 லட்சமாகவும்,பிளஸ்2 மாணவர் எண்ணிக்கை, 8.50 லட்சமாகவும் உயரலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து,சரியான புள்ளிவிவரம், டிசம்பர், 15ம் தேதிக்குள் தெரிந்துவிடும்.மாவட்டவாரியாக,பொதுதேர்வு எழுதும் மாணவ,மாணவியர் விவரங்களை பெறுவதற்காக, 11வகையான தகவல்கள் அடங்கிய படிவம் பள்ளிகளுக்கு ஏற்கனவே விநியோகம் செய்யப்பட்டன. இதில் கேட்கப்பட்ட தகவல்களை, பூர்த்திசெய்து, மாணவ,மாணவியர், ஆசிரியர்களிடம் ஒப்படைத்துவிட்டனர்.இதைத்தொடர்ந்து, இந்தவிவரங்கள் அனைத்தும்,தேர்வுதுறை இணையதளத்தில், பதிவேற்றம் செய்யும் பணி,ஓரிருநாளில் துவங்கும் என,துறை வட்டாரங்கள் தெரிவித்தன.பொதுதேர்வுகள்,மார்ச், 3ம் தேதியில்(திங்கள்கிழமை)இருந்துது வங்கும் என,எதிர்பார்க்கப்படுகிறது.வழக்கமாக,பிளஸ்2 மற்றும்10ம் வகுப்பு பொதுதேர்வுகள் தனித்தனியே நடைபெறும்.வரும் ஆண்டில்,இருதேர்வுகளையும்,ஒன்றாக நடத்துவது குறித்து,தேர்வுதுறை தீவிரமாக ஆலோசித்து வருகிறது.மார்ச், 3ம் வாரத்திற்குள்,இரு தேர்வுகளையும் நடத்தி முடிக்க,தேர்வுதுறை திட்டமிட்டுள்ளதாக துறைவட்டாரங்கள் தெரிவித்தன.இதற்கிடையே, சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு மற்றும் பிளஸ்2 பொதுத்தேர்வுகள்,மார்ச், 1ம் தேதி முதல் நடைபெறும் என,அதிகாரப்பூர்வமாக நேற்று, அறிவிக்கப்பட்டது.தமிழகம்,ஆந்திரா,கேரளா,புதுச்சேரி,மகாராஷ்டிரா,கோவா,கர்நாடக ஆகிய மாநிலங்களை உள்ளடக்கிய,சென்னை மண்டலத்தில், 10ம் வகுப்பு பொதுதேர்வை, 1.75லட்சம் பேரும்,பிளஸ்2 தேர்வை, 80 ஆயிரம் பேரும் எழுதுவர் என,சி.பி.எஸ்.இ.,வட்டாரங்கள் தெரிவித்தன.கடந்த ஆண்டைவிட, 10ம் வகுப்பு பொதுத்தேர்வை, 25 ஆயிரம்பேரும்,பிளஸ்2 தேர்வை, 10 ஆயிரம் பேரும் கூடுதலாக எழுதுகின்றனர்.

தமிழகத்தில்,சி.பி.எஸ்.இ.,பள்ளிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக,அக்கல்வித்துறைவட்டாரங்கள் தெரிவித்தன.முதலில், 240பள்ளிகள் இருந்ததாகவும், தற்போது,பள்ளிகளின் எண்ணிக்கை, 300க்கும் அதிகமாக உயர்ந்திருப்பதாகவும் துறைவட்டாரங்கள் தெரிவித்தன.சி.பி.எஸ்.இ.,அறிவிப்பை தொடர்ந்து, தமிழக தேர்வுதுறையும்,பொதுதேர்வுகுறித்த அறிவிப்புகளை விரைவில் வெளியிடும் என,மாணவர் மற்றும் பெற்றோர் மத்தியில் எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி