கல்வித்துறை அதிகாரிகளுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் 321 அவமதிப்பு வழக்குகள். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 24, 2013

கல்வித்துறை அதிகாரிகளுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் 321 அவமதிப்பு வழக்குகள்.


சென்னை ஐகோர்ட் மற்றும் ஐகோர்ட் மதுரை கிளையில் கல்வித்துறை அதிகாரிகளுக்கு எதிராக321கோர்ட் அவமதிப்பு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. கோர்ட் உத்தரவை நிறைவேற்றியதாக
அதிகாரிகள் கூறியதால் பெரும்பாலான மனுக்கள் முடிக்கப்பட்டன. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியில் உள்ள ஆசிரியர்களும்,ஓய்வு பெற்ற ஆசிரியர்களும்,பல்வேறு பிரச்னைக்காக சென்னை ஐகோர்ட் மற்றும் ஐகோர்ட் மதுரை கிளை யில் வழக்கு தாக்கல் செய்கின்றனர். அதில் பெரும்பாலான வழக்குகள் ஓய்வுக்கு பிறகு பென்சன் உள்ளிட்ட சலுகைகள் தராமல் இழுத்தடிப்பது தொடர்பானது.

இந்த வழக்குகளை விசாரித்து,சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு பென்சன் பலன்களை,குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் வழங்க வேண்டும் என கல்வித்துறை உயர் அதிகாரிகளுக்கு நீதிபதிகள் உத்தரவிடுகின்றனர். அந்த உத்தரவுகள் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் நிறைவேற்றப்படாத நிலையில்,கல்வித்துறை உயர் அதிகாரிகளுக்கு எதிராக கோர்ட் அவமதிப்பு வழக்குகள் தாக்கலாகின்றன. சென்னை ஐகோர்ட் மற்றும் ஐகோர்ட் மதுரை கிளையில் கல்வித்துறை உயர் அதிகாரிகளுக்கு எதிராக321கோர்ட் அவமதிப்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.2011ம் ஆண்டுமுதல்2012ம் ஆண்டு இறுதி வரை ஐகோர்ட்டுகள் பிறப்பித்த உத்தரவை செயல்படுத்தாததால்,இந்த கோர்ட் அவமதிப்பு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

அரசு பள்ளிகளை பொறுத்தவரை140இடைநிலை ஆசிரியர்கள், 102சிறப்பு ஆசிரியர்கள்,அரசு உதவி பெறும் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்கள்51பேர்,சிறப்பு ஆசிரியர்கள்28பேர் சென்னை,மதுரையில் கோர்ட் அவமதிப்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர்.ஐகோர்ட் கிளையில் பள்ளி கல்வி முதன்மை செயலாளருக்கு எதிரான14,கோர்ட்அவமதிப்பு வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. இதில்,பள்ளி கல்வி முதன்மை செயலாளர் சபீதா நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். கோர்ட் உத்தரவை நிறைவேற்றியதாக அவர் கூறியதால்,பெரும்பாலான அவமதிப்பு வழக்குகள்முடிவுக்கு கொண்டு வரப்பட்டன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி