4 மாணவர்களே படிக்கும் நகராட்சி பள்ளிக்கு 5 ஆசிரியர்கள். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 14, 2013

4 மாணவர்களே படிக்கும் நகராட்சி பள்ளிக்கு 5 ஆசிரியர்கள்.


மொத்தம் 4 மாணவர்களே படிக்கும் நகராட்சி பள்ளியில் 5 ஆசிரியர்கள் பணிபுரிகிறார்கள். அருப்புக்கோட்டையில் நகராட்சி நடுநிலை பள்ளியில் தான், இந்த அவலம் நிலவுகிறது.அருப்புக்கோட்டை மேலரத வீதியில்
நகராட்சி நடுநிலைப் பள்ளி உள்ளது. கடந்த 1927 முதல் செயல்பட்டு வரும் இப்பள்ளியில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை கடந்த 4 ஆண்டுகளாக படிப்படியாக குறைந்து வருகிறது. தற்போது, இப்பள்ளியில், முதல் வகுப்பில் 4 பேர், 6 ம் வகுப்பில் 2 பேர், 7 ம் வகுப்பில் ஒருவர், 8 ம் வகுப்பில் 3 பேர்களுமாக, மொத்தம் 10 மாணவர்களே படிக்கின்றனர்.இதிலும், 4 மாணவர்கள் மட்டுமே, தினமும் பள்ளிக்கு வருகின்றனர். மொத்த ஆசிரியர்கள் 5 பேர் உள்ளனர். மாணவர்கள் எண்ணிக்கையை விட, ஆசிரியர்கள் அதிகமாக உள்ளனர். இப்பள்ளியில், 10 க்கும் மேற்பட்ட வகுப்பறைகள் உள்ளன. பள்ளி முழுவதும் "டைல்ஸ்" ஒட்டப்பட்டு, குடிநீர், கழிப்பறைகள், சத்துணவு மையம் போன்றதனியார் பள்ளிக்கு நிகரான, அனைத்து வசதிகள் இருந்தும், மாணவர்கள் இங்கு படிக்க வருவதில்லை.அனைவருக்கும் கல்வி இயக்க முதன்மை கல்வி அலுவலர் சாமிநாதன் கூறுகையில்,"இப்பள்ளியில் அனைத்து வசதிகளும் இருந்தும், மாணவர்கள் சேர்க்கை மிக குறைவாக உள்ளது. ஆசிரியர்கள், வீடு வீடாக சென்று, பள்ளியின் தரத்தை பற்றி பெற்றோர்களுக்கு எடுத்துரைத்து, மாணவர்களை பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விழிப்புணர்வு ஊர்வலம் நடத்த வேண்டும். வரும் கல்வியாண்டில், மார்ச் துவக்கத்திலிருந்தே மாணவர்களை சேர்க்க, ஆசிரியர்கள் முனைப்பு காட்ட வேண்டும்" என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி