காலி தமிழாசிரியர் பணியிடம் 6 ஆயிரம் பள்ளிகளில் உடனே நிரப்ப பொதுக்குழுவில் தீர்மானம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 25, 2013

காலி தமிழாசிரியர் பணியிடம் 6 ஆயிரம் பள்ளிகளில் உடனே நிரப்ப பொதுக்குழுவில் தீர்மானம்.


தமிழகத்தில் காலியாக உள்ள6ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழாசிரியர் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்று தமிழ்நாடு தொடக்க,நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்
சங்கபொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

மத்திய அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை தமிழக அரசு வழங்க வேண்டும்.2003ம் ஆண்டிற்கு பிறகு நியமனம் செய்யப்பட்டுள்ள ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதிய முறையினை ரத்து செய்து ஏற்கெனவே நடைமுறையில் உள்ள பழைய ஓய்வூதிய முறையினை நடைமுறைப்படுத்த வேண்டும்.தமிழகத்தில்7500 நடுநிலைபள்ளிகளில் 650 பள்ளிகளில் மட்டுமே தமிழ் ஆசிரியர்கள் உள்ளனர். மீதம் உள்ள6850பள்ளிகளில் தமிழ் மற்றும் வரலாறு ஆசிரியர்கள் நியமிக்கப்படாமல் உள்ளனர்.மேலும் கற்பித்தலில் இருவேறு நிலைய உருவாகுவதால் அதை தடுக்கும் நோக்கில் பதவி உயர்வு மூலம் ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும்.
நீதிமன்ற தீர்ப்பின்படி10ம் வகுப்பு படித்துவிட்டு இடைநிலை ஆசிரியர் பயிற்சி பெற்றவர்கள் பிளஸ் டூ படிப்பிற்கு சமமாக கருதி அவர்களுக்கு பதவி உயர்வு வழங்கலாம் என ஆணை வெளியிட்டது. அதை மாநில அரசு அமுல்படுத்த வேண்டும்.

1 comment:

  1. Tamilnaattil Tamil yeanraal. ThamilagaArasukea ilakkaarm.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி