தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் இளநிலை உதவியாளர், நில அளவர், வரைவாளர் பதவிகளுக்கு டிசம்பர் 6-ம் தேதி ஐந்தாம் கட்ட கலந்தாய்வு நடைபெற உள்ளது.இது தொடர்பாக தமிழ்நாடு
அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
இளநிலை உதவியாளர், நில அளவர், வரைவாளர் பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்றது. மேற்படி தேர்வில் மேற்கண்ட பதவிகளுக்கு மீதமுள்ள 222 காலிப் பணியிடங்களுக்கான ஐந்தாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு டிசம்பர் மாதம் 6ம் தேதி காலை 8.30 மணி முதல் தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெற உள்ளது.கலந்தாய்வுக்கு வருபவர்கள் கணினி வழி விண்ணப்பத்தில் பத்தாம் வகுப்பு படிப்பை தமிழ் வழி மூலம் பயின்றுள்ளதாக உரிமை கோரியுள்ள விண்ணப்பதாரர்கள் அவர்கள் பயின்ற பள்ளியின் தலைமை ஆசிரியரிடமிருந்து ‘விண்ணப்பதாரர் பத்தாம் வகுப்பை தமிழ் வழி மூலம்தான் பயின்றுள்ளார்’ என சான்றிதழ் பெற்று வரவேண்டும்.கலந்தாய்வுக்கு வரும் அனைவருக்கும் பணி நியமனம் வழங்கப்படும் என்பதற்கான உறுதி கூற இயலாது. கலந்தாய்வில் கலந்து கொள்ள முடியாதவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்படமாட்டாது.மேலும் விவரங்களுக்கு தேர்வாணைய இணையதளத்தைப் பார்க்கலாம் என்று செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி