்ஆசிரியர் பயிற்சி முடிவுகள் ஆறு மாதமாக வெளியாகாததால் மாணவர்கள் வேதனை அடைந்துள்ளனர். சமச்சீர்கல்வி திட்டம் கொண்டு வந்த பிறகும் சிலபஸ் மாற்றாமல் பழைய பாடதிட்டத்தின் படியே தொடர்ந்து பாடம் நடத்தி
வருவதாக கூறினர்.இடைநிலை கல்வி தற்போது செயல்முறை கல்வித்திட்டம், செயல்வழிக் கற்றல் ஆகியவை மாற்றப்பட்டு தற்போது சமச்சீர் கல்வி திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால் ஆசிரியர் பயிற்சி இயக்குநரும், பாடத்திட்டம் மாற்றாமல் பழைய பாடத்திட்டத்தினை அமல்படுத்தி வருகின்றனர். இதனால் டீச்சிங், பிராக்டீஸ் செல்லும் பொழுது படித்த பாடத்திற்கும் மாணவர்களிடம் பாடம் நடத்துவதற்கும் குழப்பம் ஏற்படுகிறது என ஆசிரியர் பயிற்சி மாணவர்கள் கூறுகின்றனர்.மேலும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடந்த தேர்வுக்கு இன்று வரை ரிசல்ட் வெளியிடவில்லை. இதில் சில மாணவர்கள் டி.ஆர்.பி. நடத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். (இரண்டாம் ஆண்டு ஆசிரியர் பயிற்சி படிப்பவர்கள், பி.எட்.அட்மிஷன் ஆனவர்களும் டி.ஆர்.பி எக்ஸாம் எழுதலாம்) ஆசிரியர் பயிற்சி முடிவு வராததால் கூடுதல் மார்க் இருந்தும் வேலை கிடைக்காமல் போய்விடுமோ என கவலையில் ஆழ்ந்துள்ளனர். மேலும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களை முறைப்படுத்த வேண்டும் என விரிவுரையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி