தனி தேர்வர்களுக்கு உதவ ஒருங்கிணைந்த மையங்கள். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 16, 2013

தனி தேர்வர்களுக்கு உதவ ஒருங்கிணைந்த மையங்கள்.


அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற உள்ள மேல்நிலை மற்றும் இடைநிலை கல்வி பொதுத் தேர்வுகளுக்கு தனித் தேர்வர்களிடமிருந்து வரும், 18 ம் தேதி முதல்,
29 ம் தேதி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தனித் தேர்வர்கள் www.tndge.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.கடந்த செப்டம்பர் பொதுத் தேர்வின் போது, தனியார் பிரவுசிங் சென்டர்கள் மூலம் விண்ணப்பங்களை பதிவு செய்த போது, பல தவறுகள்காணப்பட்டன.பெயர், பிறந்த தேதி, பாடம், பயிற்று மொழி ஆகியவற்றில் தவறு இருந்ததால், 'ஹால் டிக்கெட்' வழங்குவதில் சிரமம் ஏற்பட்டது.இந்த பணிகளை வெவ்வேறு இடங்களில் செய்ததால், தனித் தேர்வர்களுக்கு அலைச்சலும், பண விரயம், நேர விரயம் ஏற்பட்டது. இவற்றை தவிர்க்கும் பொருட்டும், பிழைகள் இல்லாமல் விண்ணப்பங்களை பதிவு செய்யவும், பயிற்சி அளிக்கப்பட்ட பணியாளர்களை கொண்டஒருங்கிணைப்பு மையங்கள் (நோடல் சென்டர்) அமைக்கப்பட்டுள்ளன. இம்மையங்களின் விவரங்கள் மேலே கண்ட இணைய தளத்தில் உள்ளது.மேலும் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகங்களிலும் இந்த மைய விவரங்களை தெரிந்து கொள்ளலாம். இம்மையங்கள் மூலமாகவே கட்டணங்களையும் செலுத்த வசதி செய்யப்பட்டுள்ளது.கடந்த, 03.06.2013 முதல் 30.06.2013 வரை மற்றும் 01.10.2013 முதல் 15.10.2013 வரை அனுமதிக்கப்பட்ட தேதிகளில், அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்புக்கு பெயர் பதிவு செய்யத் தவறியவர்கள் வரும், 29ம் தேதிக்குள் பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி