இந்து சமய அறநிலையத்துறையின் செயல் அலுவலர் கிரேடு–4 பணிக்கான காலியிடங்கள் தமிழ்நாடு தேர்வாணையம் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. இதற்கான அறிவிப்புகள்
கடந்த ஜூலை மாதம் 19–ந்தேதி வெளியிடப்பட்டது. இந்த பணிக்கான மொத்த காலியிடங்கள் 23 ஆகும்.இந்த பணிக்கான தேர்வு தமிழகம் முழுவதும் 136 மையங்களில் நேற்று நடைபெற்றது. இந்த தேர்வை 36 ஆயிரத்து 250 பேர் எழுதினர். சென்னையில் எழும்பூரில் உள்ள மாநில மகளிர் மேல்நிலைப்பள்ளி உள்பட 12 மையங்களில் தேர்வு நடைபெற்றது. காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை தாள்–1 பொதுத்தமிழும், பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 5.30 மணிவரை தாள்–2 சைவமும், வைணமும் சம்பந்தப்பட்ட தேர்வும் நடைபெற்றது.காலை, மாலை நடைபெற்ற தேர்வுகள் கொஞ்சம் கடினமாக இருந்ததாக தேர்வு முடித்துவிட்டு வந்த தேர்வாளர்கள் கூறினர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி