பள்ளிகளில் காலியிட விபரங்கள் சேகரிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 22, 2013

பள்ளிகளில் காலியிட விபரங்கள் சேகரிப்பு.


அரசு, நகராட்சி உயர்நிலை,மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள ஆசிரியர், தலைமை ஆசிரியர், ஆசிரியர் அல்லாதோர் விபரங்களை பள்ளி கல்வித்துறை சேகரித்து வருகிறது.2013 நவ.,1ல்,
தலைமை ஆசிரியர் உட்பட அனைத்து வகை ஆசிரியர் காலிப் பணியிடங்கள், 2013 நவ.,1 முதல்2014 மே 31 வரை பணிநிறைவு காரணமாக ஏற்படும் காலி பணியிட விபரங்கள் சேகரிக்கப்படுகிறது.இதேபோல்,தொடக்க கல்வி அலுவலகங்கள், மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில், 2013 நவ.1 வரை காலியாக உள்ள இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்தர், உதவியாளர், கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர், 2013 நவ.,1 முதல் 2015 மார்ச் 14 வரை, ஓய்வு பெறுவதால் ஏற்படும் காலி பணியிட பட்டியலை அனுப்ப, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

1 comment:

  1. ithunal TRB PG and TET Vacancy athikarikuma??????... 2nd List PG TRB expect Pannalama?????

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி