விடுமுறை உத்தரவை மதிங்க! பள்ளிகளுக்கு கல்வித்துறை எச்சரிக்கை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 16, 2013

விடுமுறை உத்தரவை மதிங்க! பள்ளிகளுக்கு கல்வித்துறை எச்சரிக்கை.


இயற்கை இடர்பாடுகளால், மாவட்ட நிர்வாகம் விடும் உள்ளூர் விடுமுறையில், பள்ளிகளை திறந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்' என, கல்வித் துறை எச்சரித்து உள்ளது.வடகிழக்கு பருவமழை அதிகமாக பெய்யும் நாட்களில்,
பள்ளி, கல்லூரிகளுக்கு, உள்ளூர் விடுமுறை அளித்து, கலெக்டர் உத்தரவிடும்போது, கல்வி நிறுவனங்கள், கண்டிப்பாக, அவற்றை பின்பற்ற வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டு உள்ளது.கல்வித் துறையின் உத்தரவில், "மழைக்காலங்களில் பள்ளி கட்டடங்களின் உறுதிதன்மையை ஆய்வு செய்ய வேண்டும். அசம்பாவிதம் ஏற்பட்டால், முதன்மைக் கல்விஅலுவலருக்கு தகவல் தர வேண்டும். இயற்கை இடர்பாடுகளுக்காக, மாவட்ட நிர்வாகம் அறிவிக்கும், உள்ளூர் விடுமுறை தினத்தில், பள்ளிகளை திறக்கக் கூடாது. மழைக்காலங்களில், மாணவர்கள், பாதுகாப்பாக வீடுகளுக்கு செல்வதை உறுதி செய்யவேண்டும்' என, கூறப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி