சட்டசபையில்அறிவித்து பலமாதங்களாகியும்,பல ஆயிரம் பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாததால்,தமிழக கல்லூரிகளில் கல்வித்தரம் கேள்விக்குறியாக உள்ளது.மேலும், உயர்கல்வித்துறை அல்லது
யு.ஜி.சி.,யின் தீவிரகண்காணிப்பு இல்லாத பலகல்லூரிகளில்,குறைந்த கல்வித்தகுதியுள்ளவர்கள் பேராசிரியராக பணியாற்றி வருகின்றனர்.தனியார்நிறுவன 'சர்வே':
கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் கல்வித்தரம் குறித்து,டில்லியைச்சேர்ந்த ஒருதனியார்நிறுவனம்,சமீபத்தில், 'சர்வே'ஒன்றை எடுத்தது.அதில் பெரும்பாலான மாநிலங்களில், பேராசிரியர் பணியிடங்கள் காலியாகவே உள்ளன என,தெரியவந்துள்ளது.பலகல்லூரிகளில், ஒப்பந்த முறையில்தான் பேராசிரியர்கள் பணியாற்றுகின்றனர் என்ற அதிர்ச்சியான தகவலையும், அந்நிறுவனம் வளியிட்டுள்ளது.இந்த,சர்வேயின்படி,யு.ஜி.சி.,விதிப்படி,சம்பளம் வழங்கும் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை விட,ஒப்பந்த முறையில் சம்பளம் வழங்கும் கல்வி நிறுவனங்கள்தான் அதிகமாகஉள்ளன.
*ஒடிசாமாநிலத்தில் பணியாற்றும் பேராசிரியர்கள், 33 ஆயிரம் ரூபாய் வரை ஊதியம் பெறுகின்றனர்.
*மணிப்பூரில்,ஒப்பந்த முறையில், 8,000 ரூபாய் ஊதியத்துக்கு பல பேராசிரியர்கள் பணியாற்றிவருகின்றனர்.
*மகாராஷ்டிரா,குஜராத்,ஆந்திரா மற்றும் கோவா மாநிலங்களில் தற்காலிக பேராசிரியர்களே, அதிகம் பணியில் உள்ளனர். இவர்களுக்குமாதம், 8,000முதல்10 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படுகிறது.
*பஞ்சாப்,அரியானா,இமாச்சல பிரதேசம் மற்றும் காஷ்மீர் மாநில பேராசிரியர்கள், 6,000முதல்15ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் பெறுகின்றனர்.
*தமிழகத்தில், 4,000முதல், 10ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படுகிறது.இவ்வாறு,நாடு முழுவதும் பல்வேறு கல்வி நிறுவனங்களில் ஒப்பந்தமுறையில், பேராசிரியர்கள் பணியாற்றிவருவதால், கல்வித்தரம் வெகுவாக தாழ்ந்து காணப்படுகிறது.மேலும் சில கல்லூரிகளில், அதே கல்லூரியில் படித்தவர்களே,பேராசிரியராகநியமிக்கப்பட்டு பணியாற்றிவருகின்றனர்.இவர்கள்,போதிய அனுபவம் இல்லாமல்,வகுப்புகளை எடுப்பதால், கல்வித்தரம் பாதிக்கப்படுகிறது.
841பணியிடங்கள்
கடந்த மார்ச்மாதம், சட்டசபையில், உயர்கல்வி அமைச்சர் பழனியப்பன், '2012 - 13ல், 51 அரசுகலை அறிவியல் கல்லூரிகளில், 299 புதியபாடப்பிரிவுகள் துவங்கப்படும்; 841உதவிப்பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும்'என,அறிவித்தார்.தரம் குறையும் அபாயம்:
அறிவித்து பல மாதங்களாகியும், இதுவரை பேராசிரியர் பணிஇடங்கள் நிரப்பப்படவில்லை. அரசு உதவி பெறும் கல்லூரிகளை பொறுத்தவரை, 3,120 பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றில், இதுவரை, 1,000 பணியிடங்கள் கூட நிரப்பப்படவில்லை என, துறைவட்டாரங்கள் தெரிவிக்கின்றன.கல்லூரிகளில்,போதிய பேராசிரியர்கள் இல்லாமல்,வகுப்புகள் நடத்தப்பட்டு, செமஸ்டர் தேர்வும் நடந்துவருகிறது.இதே நிலை நீடித்தால், தமிழக உயர்கல்வியின் தரம் மேலும் குறைந்து விடும் அபாயம் உள்ளது. பொறியியல் கல்லூரிகளிலும், இதேநிலைதான் காணப்படுகிறது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி