திருநெல்வேலி : தபால் அலுவலகங்களில் மொபைல் மூலம் பணம் அனுப்பும் சேவை இன்று (16ம் தேதி) முதல் துவங்கப்படுகிறது.நெல்லை, பாளை., அம்பாசமுத்திரம் உள்ளிட்ட 28 தலைமை தபால் அலுவலகங்களில் மொபைல் மூலம் பணம் அனுப்பும் சேவை இன்று (16ம் தேதி)
முதல் அறிமுகப்படுத்துகிறது.இந்த சேவையின் மூலம் பணம் அனுப்ப விரும்புவோர் தபால் அலுவலகத்தில் ஒரு விண்ணப்பத்தை நிரப்பி கொடுத்தால் உடனடியாக பணம் அனுப்பியதற்கான தகவலும், ஒரு ரகசிய எண்ணும் எஸ்.எம்.எஸ்., மூலம்அவரது மொபைலுக்கு அனுப்பி வைக்கப்படும். பணம் பெறுபவருக்கும் எஸ்.எம்.எஸ்., அனுப்பி வைக்கப்படும். பணம் அனுப்பியவர் ரகசிய குறியீட்டு எண்ணை, பணம் பெறுபவரிடம் தெரிவித்த பின் பணம் பெறுபவர் குறிப்பிட்ட தபால் அலுவலகத்திற்கு சென்று பணத்தை பெற்றுக் கொள்ளலாம். மொபைல் மூலம் பணம் அனுப்பும் சேவை மூலம் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு உடனடியாக பணம் கிடைக்கும். இந்த சேவையின் மூலம் குறைந்த பட்சம் 1000, அதிகபட்சம் 10 ஆயிரம் ரூபாய் வரை அனுப்பலாம். 1000- 1500 வரை 45 ரூபாயும், 1501-5000 வரை 79 ரூபாயும், 5001-10,000 வரை 112 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படும். இத்தகவலை நெல்லை கோட்ட தபால்துறை கண்காணிப்பாளர் கண்ணபிரான் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி