துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கப்படும், தேர்வுநிலை மற்றும் சிறப்புநிலை ஊதியத்தை தங்களுக்கும் வழங்கக்கோரி,ஓய்வு பெற்ற இடைநிலை ஆசிரியர்கள், 128 பேர்தாக்கல் செய்த மனுக்களை,சென்னை உயர்நீதிமன்றம்
தள்ளுபடி செய்தது.உயர்நீதிமன்றத்தில்,இடைநிலை ஆசிரியர்கள் தாக்கல் செய்த மனுக்களில் கூறியிருப்பதாவது:
நாங்கள்,அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில், இடைநிலை ஆசிரியர்களாக பணியாற்றினோம். 10 ஆண்டுகள், 20 ஆண்டுகள்,பணிமுடித்தபின்,துவக்கப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கப்படும்,தேர்வுநிலை மற்றும் சிறப்புநிலை ஊதியம் பெற, 1993,மார்ச் மாதம்,நிதித்துறை பிறப்பித்த அரசாணையின் படி,எங்களுக்கு உரிமை உள்ளது.இது தொடர்பாக,மாநிலநிர்வாக தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவை,ஐகோர்ட் 'டிவிஷன்பெஞ்ச்', 2009ல் உறுதிசெய்து,உத்தரவு பிறப்பித்து உள்ளது.பின் இந்த உத்தரவை,சுப்ரீம்கோர்ட்டும் உறுதி செய்துள்ளது.எனவே, 1988ல் இருந்து,எங்களுக்கு தேர்வுநிலை அந்தஸ்து மற்றும் சிறப்புநிலை ஊதியம் வழங்க,அரசுக்கு உத்தரவிடவேண்டும்.இவ்வாறு,மனுக்களில் கூறப்பட்டு உள்ளது.
அரசுதரப்பில்,அட்வகேட் ஜெனரல்,சோமயாஜி,சிறப்பு அரசு பிளீடர்கள்,டி.கிருஷ்ணகுமார்,வி.சுப்பையா ஆஜராகினர்.அட்வகேட் ஜெனரல் சோமயாஜி, ''மனுதாரர்கள் இவ்வாறு கோருவதற்கு,எந்த அடிப்படையும் இல்லை.அவர்கள்,துவக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியர்களாக பணியாற்றவில்லை.மேலும்,அவர்கள்நீண்டகாலத்துக்கு முன்பே,ஓய்வுபெற்றுவிட்டனர்,''என்றார்.
மனுக்களை விசாரித்த,நீதிபதி அரிபரந்தாமன் பிறப்பித்த உத்தரவு:
பள்ளிக்கல்வித்துறை தாக்கல் செய்த மனுவை விசாரித்த,சுப்ரீம்கோர்ட், 'அரசுஉயர்நிலைப்பள்ளி,மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள்,துவக்கப்பள்ளிகளின் தலைமை ஆசிரியருக்கு வழங்கப்படும் தேர்வுநிலை மற்றும் சிறப்புநிலையை கோரமுடியாது;ஏனென்றால், அவர்கள் வெவ்வேறு பணியில் இருப்பவர்கள்'என,உத்தரவிட்டு உள்ளது. 1998ல்,இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.துவக்கப்பள்ளிகளில் பணியாற்றும்,இடைநிலை ஆசிரியர்கள்மற்றும்தலைமைஆசிரியர்கள்,தமிழ்நாடுதொடக்கக்கல்விபணிவிதிகளின்கீழ்வருவர்.உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள்,வேறுபணிவிதிகளின் வருகின்றனர்.அவர்களின் பணிநிபந்தனைகளும் வெவ்வேறானவை.அதாவது,துவக்கப்பள்ளிகள்,அதில்பணியாற்றும்ஆசிரியர்கள்எல்லாம்,துவக்கக்கல்விஇயக்குனரின்கீழ்செயல்படுகின்றனர்.உயர்நிலைப்பள்ளிமற்றும்மேல்நிலைப்பள்ளிகள்,அதில்பணியாற்றும் ஆசிரியர்கள்,பள்ளிக்கல்வி இயக்குனரின்கீழ்செயல்படுகின்றனர்.அட்வகேட்ஜெனரலின் வாதத்தை,ஏற்றுக்கொள்கிறேன். பள்ளிக்கல்வி இயக்குனர் தொடுத்தவழக்கில்,சுப்ரீம்கோர்ட் பிறப்பித்த உத்தரவு,தெளிவாக இருப்பதால்,மனுதாரர்கள் மேற்கோள்காட்டியுள்ள,உத்தரவுகளை முன்னுதாரணமாக கொள்ளமுடியாது.ஏனென்றால்,இந்தஉத்தரவுகள்,வழக்கு தொடுத்தவர்களுக்கும், அரசுக்கும் மட்டுமே பொருந்தும். அதேநேரத்தில், இந்த உத்தரவுகளை மேற்கோள்காட்டி,துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியருக்கு வழங்கப்படும்,தேர்வுநிலை,சிறப்புநிலை ஊதியம்,தங்களுக்கு வழங்கவேண்டும் என,மனுதாரர்கள் உரிமை கோர முடியாது.மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. இவ்வாறு,நீதிபதிஅரிபரந்தாமன் உத்தரவிட்டு உள்ளார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி