குரூப் 2 தேர்வு வினாத்தாளில், 17 கேள்விகள் பிரின்ட் ஆகாமல் இருந்ததால், தாமதமாக தேர்வு எழுதியது குறித்து, தேனி மாவட்டத்தை சேர்ந்த அர்ச்சனா என்பவர், டி.என்.பி.எஸ்.சி., தலைவருக்கு புகார் அனுப்பியுள்ளார்.
ஆண்டிபட்டியை அர்ச்சனா, பி.ஏ., பி.எட்., பட்டதாரி. நேற்று நடந்த குரூப்-2 தேர்வை, தேனி மேரி மாதா பள்ளி மையத்தில் (தேர்வு எண்:200103282) எழுதினார். அவருக்கு கொடுக்கப்பட்ட வினாத்தாளில், 17 கேள்விகள் "பிரின்ட்" ஆகாமல் இருந்தன. இதுகுறித்து கண்காணிப்பாளரிடம் தெரிவித்தார்.
அந்த வினாத்தாளை திரும்ப பெற்றுக்கொண்டு, அரை மணிநேரத்திற்கு பின், மாற்று வினாத்தாள் கொடுத்தனர். ஆனால், கூடுதல் நேரம் ஒதுக்கப்படவில்லை.அர்ச்சனா கூறியதாவது: தேர்வு துவங்குவதற்கு 5 நிமிடங்களுக்கு முன் வினாத்தாள் கொடுத்தனர். அதில், தேர்வு எண் உட்பட விவரங்களை எழுத சொன்னதால் எழுதினேன். வினாத்தாளை பிரித்துபோது, முதல் பகுதியில் 10 வினா, 2 ம் பகுதியில் 7 வினாக்களும் "பிரின்ட்" ஆகவில்லை. இது, என் தவறு இல்லை. எனக்கு கூடுதல் நேரம் ஒதுக்காததால், நன்றாக படித்திருந்தும் கணித கேள்விகளுக்கு பதில் எழுத முடியவில்லை. இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி., தலைவருக்கு புகார் அனுப்பியுள்ளேன். இவ்வாறு கூறினார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி