உதவி பேராசிரியர்கள் நியமனம்: ரத்து கோரி ஐகோர்ட்டில் வழக்கு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 25, 2013

உதவி பேராசிரியர்கள் நியமனம்: ரத்து கோரி ஐகோர்ட்டில் வழக்கு


அரசு கலைக் கல்லூரிகளில்,உதவி பேராசிரியர்கள் நியமனத்தில், 'நெட்' தேர்வில்தேர்ச்சியடைந்தவர்களுக்கு, ஆசிரியர் தேர்வு வாரியம்,குறைந்த மதிப்பெண் வழங்குகிறது. பல்கலை மானியக்குழு விதிக்கு
புறம்பான இந்த நியமனங்களுக்கான அறிவிப்பை, ரத்து செய்ய வேண்டும்' எனக் கோரி, மதுரைஐகோர்ட் கிளையில், மனு தாக்கல்செய்யப்பட்டு உள்ளது.

மதுரையைச் சேர்ந்த, ராஜேஷ் தாக்கல் செய்த மனு:எம்.எஸ்சி., முடித்து விரிவுரையாளர் பணிக்கான,தேசிய தகுதித் தேர்வான - நெட் -தேர்ச்சியடைந்துள்ளேன்.அரசு கலை, அறிவியல்கல்லூரிகளில், 1,093உதவி பேராசிரியர்களை நியமிக்க, மே, 28ல், ஆசிரியர் தேர்வுவாரிய உறுப்பினர் செயலர்,அறிவிப்பு வெளியிட்டார். அதில்,'உதவி பேராசிரியர்பணிக்கான தகுதிகளாக முதுகலை பட்டம்,அதே பாடத்தில், நெட் தேர்வில்தேர்ச்சி அல்லது முதுகலை பட்டம்,பிரதான பாடத்தில்,பிஎச்.டி., முடித்திருக்க வேண்டும்' என, குறிப்பிடப்பட்டிருந்தது. பல்கலை மானியக் குழு,2009ல், வெளியிட்ட விதிகள்படி, பிஎச்.டி.,முடித்தவர்கள், நெட் எழுதத் தேவையில்லை. மற்ற முதுகலைபட்டதாரிகள் தான், நெட் எழுத வேண்டும்.

நெட்தேர்வில்தேர்ச்சியடைந்தவர்களுக்கு, கல்லூரி ஆசிரியர்கள் நியமனத்தில்,முன்னுரிமை வழங்க வேண்டும். நெட்தேர்ச்சியானது, பிரதான தகுதியாகும்.தகுதியான விண்ணப்பதாரர்கள் இல்லாத பட்சத்தில், பிஎச்.டி.,முடித்தவர்களின் பெயர்களை, நியமனத்தில் பரிசீலிக்கலாம். ஆனால்நேர்காணலில், பிஎச்.டி., முடித்தவர்களுக்கு அதிக மதிப்பெண்,நெட் தேர்ச்சியடைந்தவர்களுக்கு குறைந்தளவு மதிப்பெண்வழங்கப்படுகிறது. பல்கலைக் கழக மானியக் குழு விதிகளை,ஆசிரியர் தேர்வு வாரியம் பின்பற்றவில்லை.பணி நியமனத்திற்கான,தேர்வு வாரியத்தின் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு, மனுவில்தெரிவித்துள்ளார். நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் முன், நேற்றுமனு பரிசீலனைக்கு வந்தபோது, அதன் மீதானவிசாரணையை ஒத்திவைத்தார்.

2 comments:

  1. His request is corrrect. Good luck.

    ReplyDelete
  2. We highly appreciate your logical argument. Good luck. May God help your venture

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி