ஆசிரியர் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை அவசியம்: பிரதமர்-puthiyathalaimurai - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 29, 2013

ஆசிரியர் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை அவசியம்: பிரதமர்-puthiyathalaimurai


ஆசிரியர் பற்றாக்குறையை போக்க உயர்கல்வி அமைப்புகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தி உள்ளார். பல்கலைகழக மானியக் குழுவின் 75-வது ஆண்டு நிறைவு விழா டெல்லியில் நடைபெற்றது. இவ்விழாவில் கலந்துகொண்டு பேசிய
பிரதமர் மன்மோன்சிங்,உயர்கல்வி அமைப்பை வலுப்படுத்த மத்திய அரசு உறுதிபூண்டுள்ளதாக தெரிவித்தார். பல்கலைகழங்களின் ஆராய்ச்சிகளை தொழில் துறையினர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.அடுத்த பத்து ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் நல்ல வளர்ச்சியை எட்டும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.ஆசிரியர் பற்றாக்குறை பிரச்னைகளை களைய உயர் கல்வி அமைப்புகள் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி