TRB PG TAMIL மேல்முறையீட்டு வழக்கு இன்று விசாரணைப் பட்டியலில் இட ம்பெறவில்லை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 20, 2013

TRB PG TAMIL மேல்முறையீட்டு வழக்கு இன்று விசாரணைப் பட்டியலில் இட ம்பெறவில்லை.


முதுகலைப்பட்டதாரிதமிழ்ஆசிரியர்களுக்கான போட்டித்தேர்வில், பி வரிசை வினாத்தாளில் 40 கேள்விகள் எழுத்துப்பிழைகளுடன் இருந்தன. பிழையான கேள்விகளுக்கு முழுமதிப்பெண்
வழங்கவேண்டும் எனக்கோரி சென்னை உயர்நீதிமன்றமதுரை கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்தநீதிபதி எஸ்.நாகமுத்து, தமிழ்ப்பாடத்துக்கு மறுதேர்வுநடத்த ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு உத்தரவிட்டார். இந்தஉத்தரவை எதிர்த்து தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை முதன்மைச்செயலர்,இயக்குநர்,டிஆர்பி செயலர் ஆகியோர் மேல்முறையீடுமனுவைத் தாக்கல் செய்தனர். சென்ற வாரம் நீதியரசர்கள் சுதாகர், எஸ். வைத்தியநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு தனி நீதிபதியின் தீர்ப்பினை இரத்துசெய்து தேர்வு முடிவினை வெளியிடவும்,, வழக்கு தொடுத்த கிளாரா, விஜயலட்சுமி ஆகியோருக்கு மட்டும் 21 கருணை மதிப்பெண் வழங்கியும் இடைக்கால உத்தரவு பிறப்பித்து வழக்கினை 20.12.13 க்கு ஒத்தி வைத்தது.

இந்நிலையில் (20.12.13 ) அவ்வழக்கு விசாரணைக்கு பட்டியலிடப்படவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கிருஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி டிசம்பர் 25 முதல் நீதிமன்றத்திற்கு விடுமுறை என்பதால்.அத்தேதிக்குள் வழக்கு விசாரணைக்கு வராவிட்டால் அதன் இறுதி முடிவு தெரிய மேலும் தாமதமாகக் கூடும்.

3 comments:

  1. ஆமா அப்டியே தீர்ப்பு சொல்லிட்டாலும் நாங்க அசந்துருவோம்ல :( என்ன கொடுமை சார் இது.

    ReplyDelete
  2. please send model question paper for the elective paper proficiency in teaching profession for b.ed of tnteu syllabus

    ReplyDelete
  3. Flash News

    TRB & TN GOVT take a decision

    ALL PG & TET EXAMS cancelled

    COUNDUCT RE-EXAM AFTER MP ELECTION

    SO, ALL TEACHERS MP ELECTION PUT A VOTE

    NOTA VOTE .........!
    NOTA VOTE ........!
    NOTA VOTE ........!
    NOTA VOTE ........ !
    NOTA VOTE..........!
    NOTA VOTE .........!
    NOTA VOTE..........!

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி