10ம் வகுப்பு பொதுத்தேர்வு கட்டணம் குறைந்தது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 16, 2014

10ம் வகுப்பு பொதுத்தேர்வு கட்டணம் குறைந்தது.


நடப்பாண்டு, 10ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான கட்டணத்தை, தேர்வு துறைஇயக்குனரகம் குறைத்துள்ளது. தமிழகத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு
எழுதும் மாணவர்கள், விண்ணப்பத்துடன், குறிப்பிட்ட தொகையை கட்டணமாக, தேர்வு துறை இயக்குனரகத்துக்கு செலுத்த வேண்டும். நடப்பு ஆண்டில், லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளதால், பணிகளை, தேர்வு துறை வேகப்படுத்தியுள்ளது. அடுத்த மாதம் முதல் வாரத்தில், மாணவர்களுக்கான செய்முறை தேர்வு துவங்க உள்ளது. எனவே, தற்போது, தேர்வு கட்டணத்தை, தேர்வு துறை இயக்குனரகம் அறிவித்துள்ளது.

கல்வி துறை உயரதிகாரிகள் கூறியதாவது: கடந்த கல்வி ஆண்டில், 10ம் வகுப்புக்கு, தேர்வு கட்டணமாக, 125 ரூபாய் வசூலிக்கப்பட்டது. நடப்பாண்டில், 115 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.முதல் மற்றும் இரண்டாவது குரூப் படிக்கும், பிளஸ்2 மாணவர்கள், செய்முறை தேர்வு எழுத உள்ள மாணவர்கள், 225 ரூபாய் செலுத்த வேண்டும். செய்முறை தேர்வு இல்லாதவர்களுக்கு, 175 ரூபாய் தேர்வு கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்தொகையை, வரும், 17ம் தேதி முதல், 23ம் தேதிக்குள், தலைமை ஆசிரியர்களிடம், மாணவர்கள் செலுத்த வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி