17-ல் கடலூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 5, 2014

17-ல் கடலூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை.


வடலூரில் வள்ளலார் தைப்பூச ஜோதி தரிசன பெருவிழா வருகிற 17ஆம் தேதி நடைபெறவுள்ளதால், கடலூர் மாவட்டத்துக்கு அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.கடலூர் மாவட்டம்,
குறிஞ்சிப்பாடி வட்டம், வடலூரில் வள்ளலார் தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா வருகிற 17ஆம் தேதி நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ரா.கிர்லோஷ்குமார் வெளியிட்ட செய்திக் குறிப்பு:அதையொட்டி மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு அலுவலகங்களுக்கும், பள்ளிகளுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.அவ்விடுமுறையை ஈடு செய்யும் வகையில் பிப்ரவரி மாதம் 8ஆம் தேதி, சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது.உள்ளூர் விடுமுறை நாளாக அறிவிக்கப்படும் 17ஆம் தேதி பொது முக்கியத்துவம் வாய்ந்த அரசு அலுவலகங்கள், அவசர பணிகளை மேற்கொள்ளும் பொருட்டு குறைந்தபட்ச பணியாளர்களோடு செயல்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி