பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களில், தேர்ச்சியில் பின் தங்கிய மாணவர்களுக்கு, பாட வல்லுனர் குழுவினர் 'சிறப்பு வினா விடை கையேடு' தயாரித்துள்ளனர். இதைகொண்டு, காலை, மாலை வேளைகளில், மாணவர்களுக்கு பாடம்
நடத்தி, அரசு பொது தேர்வில், 100 சதவீதம் தேர்ச்சி அடைய செய்யும் முயற்சியில், ஆசிரியர்கள் ஈடுபட உள்ளனர்.பத்தாம் வகுப்பு மாணவர்களுக்குமார்ச்., 26, பிளஸ் 2 மாணவர்களுக்கு மார்ச் 3 ல் அரசு பொது தேர்வு துவங்க உள்ளது. அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற, வினா விடை கையேடு தயாரிக்க, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளி கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார்.இதை தொடர்ந்து, விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவுரைப்படி, பள்ளிகளில் 20 ஆண்டுகளுக்கு மேல் பணி புரிந்து, 100 சதவீத தேர்ச்சி பெற செய்த ஆசிரியர்கள், ஒவ்வொரு பாடத்திற்கும் வினா விடை கையேடு தயார் செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதை, தமிழ், ஆங்கிலம் என,இரண்டு மொழிகளில் தயாரித்து, புத்தகமாக வெளியிட்டுள்ளனர். இதன் மூலம், தேர்ச்சியில் பின் தங்கிய மாணவர்களுக்கு, காலை, மாலை வேளைகளில், சிறப்பு வகுப்பு எடுக்க உள்ளனர். 'இதன்படி மாணவர்கள், அரசு பொது தேர்வில், 100 சதவீத தேர்ச்சி அடைய முடியும்,' என, கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி