தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கடந்த ஆண்டு இஎம்ஐஎஸ் (எஜுகேஷன் மேனேஜ்மென்ட் இன்பர்மேஷன்சிஸ்டம்) எனப்படும் அடையாள எண்
வழங்கப்பட்டது. இதில் மாணவர் பெயர், பள்ளி, முகவரி, அங்க அடையாளம் உள்ளிட்ட விபரங்கள் இருக்கும். இந்த எண் சில பள்ளிகளில் ஒரு சில மாணவர்களுக்கு வழங்கப்படாமல் விடுபட்டுள்ளது. இந்த நிலையில், பெற்றோர் தங்கள் பிள்ளைகளை ஒரு பள்ளியிலிருந்து மற்றொரு பள்ளியில் சேர்க்கும் போது, ஏற்கனவே படித்த பள்ளியில் வழங்கப்பட்ட அடையாள எண் தருமாறு கேட்கின்றனர்.
இது குறித்து, மீண்டும் சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு சென்று கேட்டால் மாணவர் பெயரில் அடையாள எண் பதியாமல் விடுபட்டு இருப்பது தெரியவருகிறது.புதிதாக படிக்கும் பள்ளியில் விவரங்களை பதிந்து பெற்றுக் கொள்ளுமாறு, அவர்கள் பதில் அளிக்கின்றனர். ஆனால், பழைய எண் இருந்தால் தான் புதிய எண் பதிய முடியும் என புதிதாக சேர்க்கப்படும் பள்ளி நிர்வாகத்தினர் கூறுகின்றனர். இந்த குழப்பங்களால், ஒரு பள்ளியில் இருந்து மற்றொரு பள்ளியில் சேரும் மாணவர்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர். பெற்றோரும் அவர்களது சொந்த அலுவலகப் பணிகளை விட்டுவிட்டு அலைந்தும் தீர்வு கிடைக்காமல் விரக்தி அடைகின்றனர். எனவே, கல்வித்துறை அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகள் இந்த பிரச்னைக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள், பெற்றோர் மற்றும் கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி