மீண்டும் வேலை கேட்டு மக்கள் நலப்பணியாளர்கள் தாக்கல் செய்த புதிய மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்யும்படி தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில்
கடந்த தி.மு.க. ஆட்சியின்போது சுமார் 13 ஆயிரம் மக்கள் நல பணியாளர்கள் பணி நியமனம் செய்யப்பட்டனர். இதையடுத்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து, அவர்கள் அனைவரும் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இதைஎதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், மக்கள் நல பணியாளர்கள் வழக்கு தொடர்ந்தனர். இந்த மனுவை நீதிபதி சுகுணா விசாரித்து, மக்கள் நல பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டார். இந்த தீர்ப்பை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை 2 நீதிபதிகள் கொண்ட டிவிஷன் பெஞ்ச் விசாரித்து, பணி நீக்கம் செய்யப்பட்ட மக்கள் நல பணியாளர்களுக்கு 5 மாதம் சம்பளம் வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. மேலும், நீதிபதி சுகுணா பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டது.இந்த நிலையில், இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மக்கள் நல பணியாளர் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் மதிவாணன், சென்னை ஐகோர்ட்டில் புதிதாக ஒரு மனுவை தாக்கல் செய்தார். அந்த மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்ததை தொடர்ந்து, சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, ‘மக்கள் நலப்பணியாளர்கள் வழக்கை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது சரியல்ல. எனவே அவர்களது வழக்கை, சென்னை ஐகோர்ட்டு மீண்டும் விசாரிக்கவேண்டும்’ என்று உத்தரவிட்டது.இதையடுத்து, மக்கள் நல பணியாளர்கள் முன்னேற்ற சங்கம், தங்கள் சங்க உறுப்பினர்களுக்கு மீண்டும் பணி வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றுபுதிய மனுவை சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்தது. இந்த மனு நீதிபதிகள் சத்தீஷ்குமார் அக்னிகோத்ரி, கே.கே.சசிதரன் ஆகியோர் முன்பு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் மூத்த வக்கீல் பி.வில்சன் ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து, இந்தவழக்கிற்கு பதில் மனு தாக்கல் செய்யும்படி தமிழக அரசுக்கு நோட்டீசு அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கு விசாரணையை 27–ந் தேதிக்குதள்ளிவைத்தனர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி