ஆசிரியர் தகுதித்தேர்வில் இட ஒதுக்கீடு பின்பற்றவில்லை, இட ஒதுக்கீட்டுக் கொள்கைக்கு எதிராக யார் எந்த முயற்சியில் ஈடுபட்டாலும் திமுக அதனை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்காது; தானே களம் அமைத்துப் போராட நேர்ந்தாலும் தயங்காது-திமுக தலைவர் கருணாநிதி.Dinakaran News - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 4, 2014

ஆசிரியர் தகுதித்தேர்வில் இட ஒதுக்கீடு பின்பற்றவில்லை, இட ஒதுக்கீட்டுக் கொள்கைக்கு எதிராக யார் எந்த முயற்சியில் ஈடுபட்டாலும் திமுக அதனை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்காது; தானே களம் அமைத்துப் போராட நேர்ந்தாலும் தயங்காது-திமுக தலைவர் கருணாநிதி.Dinakaran News


இடஒதுக்கீட்டு கொள்கைக்கு எதிராக யார் எந்த முயற்சியில் ஈடுபட்டாலும் திமுக வேடிக்கை பார்க்காது. களம் அமைத்து போராட்டம் நடத்த தயங்காது என்று கருணாநிதி கூறியுள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

திராவிட இயக்கக் கொள்கைகளையும், சின்னங்களையும் வேரோடும், வேரடி மண்ணோடும் குழி தோண்டி புதைக்க வேண்டு மென்ற எண்ணத்தோடு முதல்வர் ஜெயலலிதாவின் அதிமுக அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இப்போது ஜெயலலிதா எடுத்துள்ள முடிவினால் சமூக நீதிக் கொள்கைக்கு மீண்டும் ஒரு சோதனை ஏற்பட்டிருக்கிறது.திமுக ஆட்சிக் காலத்தில் எடுக்கப்பட்ட கொள்கை முடிவின்படி ஓமந்தூரார் வளாகத்தை உருவாக்கினோம் என்ற ஒரே காரணத்திற்காக புதிய தலைமைச் செயலகக் கட்டிடத்தை இரண்டரை ஆண்டுக் காலமாக பூட்டி வைத்த முதல்வர், தற்போது அதே கட்டிடத்தில் புதியமருத்துவமனையை நடத்தப் போவதாக அறிவித்து, தலைமைச் செயலக அலுவலகத்திற்காகவும், சட்டப் பேரவைக்காகவும் எனத் திட்டமிட்டு கட்டப்பட்டிருந்த கட்டிடத்தை மருத்துவமனைக்கு உரிய விதத்தில் மாற்றுவதற்காக, பல கோடி ரூபாய், மக்களின் வரிப்பணத்தை வீண் விரயம் செய்து மாற்றியமைத்து, தற்போது அந்த மருத்துவமனையில் பணியாற்றுவதற்காக டாக்டர்களையும், அலுவலர்களையும் தேர்ந்தெடுக் கும் பணியில் ஈடுபட்டிருக்கிறார்.இந்த அதிகாரிகளையும், டாக்டர்களையும் தேர்ந்தெடுப்பதற்கான அரசாணை 27-12-13ல் பிறப்பிக்கப்பட்டுள்ளது. வேண்டுமென்றே, திமுக ஆட்சியில் கட்டப்பட்ட கட்டிடத்தை மருத்துவமனையாக மாற்றுகின்ற காரணத்தால், தற்போது அங்கே நியமிக்கப்பட வுள்ள அதிகாரிகளுக்கும், டாக்டர்களுக்கும் சம்பளத்தையும் மிக அதிகஅளவில் அறிவித்திருக்கிறார்கள். மேலும் இந்தப் பதவிக ளுக்கு இட ஒதுக்கீடு கிடையாது. ஊதியம் ஒவ்வொருவருக்கும் எவ்வளவு என்று குறிப்பிட்டுள்ள அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அரசின் இந்த ஆணையைக் கடுமையாக எதிர்த்து அறிக்கை வெளியிட்டதுடன், இதனை அதிமுக அரசு திரும்பப் பெறாவிட்டால், தமிழகம் கொந்தளிக்கும் என்றும் தெரிவித்திருக்கிறார். அதிமுக அரசு சமூக நீதி லட்சியத் திற்கு எதிராகச் செயல்படுவதென்பது இது முதல் முறையல்ல 2013, ஆகஸ்ட் மாதம்17, 18ம் தேதிகளில், ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசின் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது.அப்போது நான், தகுதித் தேர்வுக்கு மொத்த மதிப்பெண் 150. தேர்ச்சி பெறுவதற்கு 90 மதிப்பெண்கள் பெற வேண்டும், அதாவது 60 சதவீதம்.

2 முறை ஏற்கனவே நடத்தப் பட்ட தகுதித் தேர்வில் தேர்ச்சி விகிதம் குறைவாக இருந்ததால், அதிலும் குறிப்பாக தாழ்த்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் மிகக் குறைந்த எண்ணிக்கையில் இருந்ததால், குறைந்த பட்சம் இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்காவது சலுகை வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட போதிலும், தேர்ச்சி மதிப்பெண்ணில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை.தேர்ச்சி பெற அனைத்துப் பிரிவினரும் 150 மதிப்பெண்கள் பெற வேண்டும் என்று தான் வைக்கப்பட்டது. பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட் டோர் ஆகியோர், உயர் வகுப்பினரைப் போலவே 60 சதவீதம் மதிப்பெண் பெற வேண் டும் என்பது தமிழகத்தில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது தேசிய ஆசிரியர் கல்விக் கழகத்தின் வழிகாட்டுதலுக்கு விரோதமானதாகும்.தேசிய ஆசிரியர் கல்விக் கழகத்தின் வழிகாட்டுதலின்படி, ஆந்திராவில் முன்னேறிய வகுப்பினருக்கு 60, பிற்படுத்தப்பட்டோ ருக்கு 50, தாழ்த்தப்பட்டோருக்கு 40 சதவீதம் மதிப்பெண்கள் என்றும் அசாமில் உயர் சாதியினருக்கு 60, மற்றவர்களுக்கு 55 சதவீதம் என்றும் ஒரிசாவில் உயர்சாதியினருக்கு 60 சதவீதம், மற்றவர்களுக்கு 50 சதவீதம் மதிப்பெண்கள் என்றும் தகுதி மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாட்டில் மட்டும் ஜெயலலிதாவின் அதிமுக அரசு அனைத்துப் பிரிவினருக்கும் 60 சதவீத மதிப்பெண் என்று கல்வி மற்றும் சமூக நிலைகளில் பிற்படுத்தப்பட்டோரையும், மிகப் பிற்படுத்தப்பட்டோரையும், தாழ்த்தப்பட்டோரையும் முன்னேறிய வகுப்பினரைப் போலவே கருதி, நிர்ணயித்துள்ளது என்பது, பெரியாரின் சமூக நீதி கொள்கைக்கு எதிரானதும், இட ஒதுக்கீட்டுக் கொள்கைக்கு முற்றிலும் விரோதமானதுமாகும்.

எனவே ஆசிரியர் தகுதி தேர்வை ஆகஸ்டில் நடத்தப் போவதாக அறிவித்துள்ள தமிழக அரசு இந்த முறையாவது இட ஒதுக் கீட்டுக் கொள்கையைப் பின்பற்றி வேறு மாநிலங்களில் செய்திருப்பதைப் போல தேர்வுக்கான மதிப்பெண்களில் மாற்றம் செய்து, பின்தங்கிய சமுதாயத்தினரைக் காப்பாற்ற முன் வர வேண்டும் என்று விரிவாக தெரிவித்திருந்தேன்.எனினும் அதிமுக அரசு சார்பில் அதைக் காதில் போட்டுக் கொள்ளவில்லை.
மேலும், ஜெயலலிதாவின் அதிமுக அரசு, 22-11-93ல் உச்சநீதிமன்றத்தில், 69 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த மாட்டோம் 50 சதவீத இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துகிறோம் என்று உறுதிமொழி கொடுத்தது. இதிலிருந்து அவர்கள் மனதில்எந்ந கருத்து வேரூன்றி இருக்கிறதோ, அதைத் தான் வாய்ப்பு கிடைக்கின்ற நேரத்தில் வலியுறுத்தி வருகிறார்கள் என்பது வெள்ளிடை மலை.இதை மீண்டும் ஒரு முறை மெய்ப்பிக்கும் வகையில் தான் தற்போது இந்த சிறப்பு மருத்துவமனைக்கு அதிகாரிகளையும், அலுவலர்களையும் தேர்ந்தெடுக்கின்ற நேரத்தில், இட ஒதுக்கீடு கிடையாது என்று ஜெயலலிதா மீண்டும் ஒரு முறை சமூகநீதியின் குரல்வளையை நெரிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்.

இடஒதுக்கீடு என்பது திராவிட இயக்கத்தின் அடிப்படை கொள்கை. அதற்காக நாம் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம். இட ஒதுக்கீட்டுக் கொள்கைக்கு எதிராக யார் எந்த முயற்சியில் ஈடுபட்டாலும் திமுக அதனை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்காது; தானே களம் அமைத்துப் போராட நேர்ந்தாலும் தயங்காது. இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

64 comments:

  1. Next DMK 2016 il kandippaga TET Maxiumum pass % 50 or 40 % aka than irukkum

    ReplyDelete
  2. Epdi class edukka arvu thevai illai community iruntha pothum pasanga urupattapdithan ithanalathan makkal marana adi koduthuduranga kodumayan naaduda saami

    ReplyDelete
    Replies
    1. yaen b.ed, tr training padichavangaluku arivu illanu solla variya..................!

      Delete
    2. Idaothuketu illane neenga ellam innum madu mechututhan iruntherepenga.illa bed than paducheruprngala?

      Delete
  3. yeppa karunanithi last year tet la reservation illama posting pottapa yenkapa poi iruntha election varaporathala stunt adikira

    ReplyDelete
  4. no reservation .all caste are same.teachingil mark kurrika kudathu.kalvial big-rich elam kidayathau
    govt decision good.

    ReplyDelete
  5. Naadu nasama pona avanungalukkenna votu porikkinga.

    ReplyDelete
  6. Government corecta irukkanga, porama pudicha polititions avanga polappukaga dhundi vittu case poda vatchu namma manavargaloda ethir kalaththa paladikiranunga, orukalathula hindi venamnu solli oru thalaimurayea hindi theriyama poiduchu ivanunga varisungala mattum padikka vatchu ministers aki sambathitchukittanunga vadivel solrapdi innuma ulagam ivanungala nambuthu

    ReplyDelete
    Replies
    1. hindhi venamnu evanum sollala compel pannathinganutha sonnanga. vendiyavanga hindhi padicha thappu illa. naanum dmk ku oppsite than but hindhi padikkathanala tamil nadu onnum keele poidala. hindhi padichavanellem inge vandhu than cooli velai seirnanga. tamil natule 2 language irundhathala than namma tamil nadu educationle ivlo develop aachu.

      Delete
  7. கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில்(டிஆர்பி) இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வு நடத்தப்பட்டது. கடந்த நவ.5ல் தேர்வு முடிவு மற்றும் இறுதி கீ ஆன்சர் வெளியிடப்பட்டது. 6.6 லட்சம் பேர் எழுதிய தேர்வில் 27 ஆயிரம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர்.
    இந்நிலையில் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தாள் 2 கீ ஆன்சரில் சைக்காலஜியில் சில வினாக்களுக்கு தவறான விடைகள் வெளியிடப்பட்டதாக தேர்வர்கள் டிஆர்பியில் புகார் அளித்தனர். சென்னை, மதுரை உயர்நீதிமன்றங்களில் இது தொடர்பாக 300க்கும் மேற்பட்ட வழக்குபதிவு செய்யப்பட்டன.
    இந்நிலையில் சென்னை மற்றும் மதுரை உயர்நீதிமன்றங்களில் நாளை மறுநாள் இந்த வழக்குகள் மீண்டும் விசாரணைக்கு வருகின்றன. வழக்கு நடந்து வருவதால் தேர்வு முடிவுகள் வெளியாகி 2 மாதங்கள் ஆகியும், சான்றிதழ் சரிபார்ப்பு உள்ளிட்ட அடுத்த கட்ட நடவடிக்கைகள் எதையும் டிஆர்பி செய்ய முடியவில்லை. இதே நிலை நீடித்தால் இந்த கல்வி ஆண்டில் ஆசிரியர் நியமனம் செய்ய முடியாது.
    எனவே நாளை மறுநாள் டிஆர்பி மீதான அனைத்து வழக்குகளும் முடித்து வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ReplyDelete
  8. Nalla nadippu sami....... election varuthulla...... yarum emandthunatheenga.......

    ReplyDelete
  9. Adutha DMK periodil TET 150 questionilla yar yar athigamaga thappana answer pannurangalo avangathan select ............... so dont study and dont go to coaching centre

    ReplyDelete
  10. ஆகா! அருமையான நடிப்பு !
    தலைவரே 40ம் நமக்கே ! பட்டய கெளப்புங்க!

    ReplyDelete
  11. padichavan evanum pass pannamattan unga katchikaranoda sondakaranga mattum than pass pannuvanga thanks thalaivare

    ReplyDelete
  12. Already supreeme court declare this issue state givernment decitionla thalaiyita mutiyathu endru sollivittathu ivaru puthusa kilapraru arasiyal natakkuthu

    ReplyDelete
  13. Orukalathula teachers ellarum DMK supporteda irunthanga ipo ADMK periodla nearmaya 2 yearsa posting podurathala ellearum ADMK supporteda mariduvanganra vaitherichal athan ipdi kuttaya kilappurapdi ipdi pannina innum adhigama avangala verukkathan seivanga ithukuda puriyala 90 vayasu thandina maga nadikanukku

    ReplyDelete
  14. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  15. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  16. Inga arasiyal naaadagatha ellam padikadha paamarngita vachikanga, padicha teachers engakita venom kudumba arasiyal thalaivare idhu Emma versa vidhamana ottu pichaya. Ipadhan arasiyal vadhinga thalaiyeedu I llama posting nadakudhu ilangai thamilar prachinaya kilichitaru ippa manavarukaga kalam irangurram . deposit kaaliyagama thapika paarungapa. Porattam ellam apparam pannalam

    ReplyDelete
  17. frnz am really proud of this young generation many r fighting against criminal politicians and reservation,nearly i missed out 10government jobs because of this. am coming under poor OC category

    ReplyDelete
    Replies
    1. against reservation no one is fighting. all we need reservation. but in eligibility same mark ok to maintain quality. but in appointment there is reservation so no problem

      Delete
  18. INTHA PROBLEM LA DMK PORATTAM PANNINAL KANDIPA M.P ELECTION LA DEPOSIT KUDA VANGATHU TET EXAM ENPATHU VARAPRASATHAM IPPADI SOLVATHANAL NAN CURRENT YEAR STUDENT NU NINACHUKATHEEGA NAN DTED 2004 SENIORITY CANDITATE

    ReplyDelete
  19. Tet paper 2 pass panivitan, hrundalum idaothukhidu sarianaduthan , dmk poraduvathum sarianathu

    ReplyDelete
    Replies
    1. aiya neega solrathu rightuga, ivlo nalu thatha sabarimala poiruntharugala?
      neega padikirathuku saluga katiga amma kudukuraga ( only in admk to all sc st students free engineering sheets) apavum padikama ipavum saluga vanuna enaga nayam. community pasuranu neaikathiga it is real

      Delete
    2. engg oru padipu athoda posting a compare pannathinga, avanga soldrathu sc, st students pass pannunavanga kuraiva irukum pothu avangaluku mark kuraikalam nu thaan, sc, st posting a avangaluke kudukanum nu thaan plan, avangaluku koduka vendiya posting a other caste la irukavangala potutangana future la sc, st la yaarum posting la iruka maatanga, yerkanave low a iruka avanga mela varanum nu thaan itha soldranga, yaarum thappa eduthuka venam, pona time a itha avanga pannirukanum, appo summa irunthutu ippa pesi enna aaga povuthu..............?

      Delete
    3. neega solrathum right thaga bt na ena solrana other caste postingku varamudiyuna iviganalamatum why posting ku varamudiyathu. padikumpothu neraya salugakudukuraga atha payanbaduthikuda munuku varamudiyalana teacher anathukapram students gathi. india students kailatha irukunu solriga, antha studenta shape pandrathu teachers kailathaga iruku. antha teacher 90 mark kuda vagamudilana aviganala epadi student ah shape panamudiyum? government posting podumpothu communal ah follow panum pona time kuda follow panuch.
      enaporuthavarai pg trb layum communal ah remove panita 12th student will get quality students. bcz collegela 1st class eduthavan pichai edukaran arriar vachu padichavan picha poduran ithudan india voda nelamai. itha sari pananuna communal la olikanum. income adipadaila posting and salugaigal kudukanum

      Delete
    4. 12th student will get quality teachers not student (correction)

      Delete
    5. dear 10.18 anonymous first edukku namma satathile reservationu vanthuchunu oru teachra vara pora neenga purinjukkanum. kalam kalam summa ukkanthutu ulaikiravanga kasile valnthutu padikaratha mattume tholila vechuttu irunthuthunala ulakaravngalukku padikkra vaipe kedaikkle toilet clean panravan adheve clean pannitu irundhan. alukku thuni thovaikkravan adutha van thuniye thovaichitte irundhan, aduthavanoda alukku mudiya (nan bold pesa virumbala)eduthitu irukkravan eduthitte irundhan idhellam maranumnu than avanukku konjam salugai kodukrathukku namma sattam vali senjuirkku. purinjukkonga pls.

      Delete
    6. frnd sc st's um mela varanum nu thaan intha reservation kondu vanthurukanga, ivalo salugai kuduthum varalanu kekuringa appo apdiye vitranuma enna... innum epdi avangala mela kondu varathuku muyarchi edukanumo ozhinju othuki vachura kurathu.............. oru dialogue adikadi kelvi patrukome gnabagam iruka................ panakaran melum panakarana aguram yezhai melum yezhaya agite irukanga, itha maathanum la athuku thaan reservation, ok va

      Delete
    7. ipo kallam mariduchu sc st layum rich irukaga be mbc layum poor irukaga. varugala india students ah nambithan iruku so reservation education la matum vandanu nenaikiren. athula kudutha kandipa quality education irukathu. bcz pg trb st candidate 52 mark vagitu posting vagure bc candidate 95 mark eduthum posting vagamudiyama poguthu. antha 52 edutha candidate nalla teach panuvagala?

      Delete
    8. appo ladies quota vum vediyathu illa, tamil medium quotavum vendiyathum illa illya?

      Delete
    9. 52 mark edutha nalla teach panna maatangala, onnum mattum therinjukanga mark athigama vangura ellarum nalla teach pannuvanganu solla mudiyuma, nalla padikiravanga nalla teach pannuvanganu sollave mudiyathu, oru flash back a ninachu paarunga, 12th la nalla mark eduthavan engg padichutu work illama irukan, but fail agi again exam ezhuthi pass pannunavan govt work ku kuda poirukan, so neenga soldrathu unmai illa, society la ella caste um thaan irukanga, bc, mbc oc, mattume illa, so ivanga nalla teacher a varuvanga, ungaludaya ennam thavaranathu, athukaga thaan sattathulaye sollirukanga, atha change panna maatanga

      Delete
  20. Ippa mattum Deposite vangapogutha...........dmk ku poratam panna vera vali illama entha prachanaiaa vera nontran ethu.... thevaillathathu mr kalainar kollaikaran ....mutitu unga worka parunga ex Aptinu ungala pass pannavinga ellam sema aaathu athuvanga sir

    ReplyDelete
  21. Communal reservation neekka vendum jaathi enpathe illai endru sollum intha natil 69 per en reservation vaikka vendum economy basic or mark ithil ontrai mattum reservation ku eligiple ka vaikkavendum tet is exampleb for all exams govt plz take a strong desition

    ReplyDelete
    Replies
    1. approm eduku kovilukkulle mattum jathiya pathu vidame irukkinga. samikku pakkathile mattum kuripita jathi mattume poganumnu solranga . first adha mathunga approm ellathuyum mathalam.

      Delete
    2. athelam antha kaalam. i have many friends from different communities. i call all of them of my home to celebrate thiruvila. as me so many educated people r doing now. antha kaalathula secession kuduthaga apo poor ah irunthaga bt ipo apadi illa. sc la poor irukagana bc layum ipo poors irukaga athuku ena pandrathu. so now all r equal to government ok

      Delete
    3. update ur knowledge government control la irukra temple ethulayum community ku velaye illai. eg palani

      Delete
    4. all r equal nu soldrathu ellaam summa, ithu ella place layum otthu varalaye, school la students a serkum pothu caste mention pandrom, govt college la serum pothu reservation iruke, ella community um padikira mathiri thane system a iruku............. itha ozhikirathu kastam thaan.

      Delete
    5. nama thatha tha irukanum olikakudathunu solraru.

      Delete
    6. schoola ethuku kekragana salugaikal kuduka kekaraga. ipadi nayam pasuregale government kudukura salugaigala vendanu solitu we r equal, engaluku matum ethukunu kelugale papom?

      Delete
    7. appo jathi illama than namma tamil nadu le dharma puri kalavaram nadanthutha? govt control le irukkra kovillukku communitykku velai illaya? edhta base panni pesaringa ? appram en ella jathiyum archagara varanumndra law va ethirikirnga? approm drainage suthapadthrathukku mattum ella jathi karanum pomatingringa? adukkellam all are equal illa vere nalla velaina athukku mattum all are equal.yarukku knowledge up date illa? pls explain. itha namma oru arokiyamana debatave eduthukklam

      Delete
    8. first mele irukkra jathi karanga thaltha patavanga veetu ponnaya paiynaoyo avan nallavana iruntha kalyanam pannatum appram pesalam jathiya kekakoodathunu. kalyanam pannumbothu mattum avan enaa jathi nu pakkrom illya . school oru thadava jathiya kekarthunalla thappu illa/

      Delete
    9. teachra poga pora namma en reservation irukkungratha purinjukkama namma epadi studentsa munetra porom.

      Delete
    10. socity ah change pandrathu kastam graduala than change agum. government poruthavaralum all r equal . tet la concession kudukathadu government jathiya olika edutha muthal muyarchi and concession kudutha teacher's quality ilamal poidum. ungaluku kandipa concession vanuma government la neraya department iruku athula keluga. educationa viduduvom . future layavathu government studentsku thaniyar schoolku equala educaiton kedaikatum .

      Delete
    11. nanagalum tet markle conession venunu kekela. athu 60% irukkatum. neenga podthuva reservation vendanuthukku than reply panren. that is all.

      Delete
  22. TRB PG-TET I/ TET II -முதுகலை பட்டதாரி/ஆசிரியர் தகுதித்தேர்வு சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள்(WRIT PETITIONS RELATING TO AWARD THE MARK AND PERMIT THE PETITIONER'S PARTICIPATE IN CERTIFICATE VERIFICATION FOR THE POST OF P.G.ASSISTANT / B.T.ASSISTANT /GRADUATE ASSISTANT / SECONDARY GRADE TEACHER - YEAR 2013 )அனைத்தும் 03.01 2013 அன்று விசாரணைக்கு வந்தன.நீதியரசர் சுப்பையா மீண்டும் jan 20 வழக்கு விசாரணக்கு ஒத்திவைத்தார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன

    ReplyDelete
  23. My dear frnds. Jaathi azhiyanumna reservation kandipa follow pananum. Otherwise idhu sattathirku ethiranadhu. Pls undrstnd puriyalana 7667150303 cal me

    ReplyDelete
    Replies
    1. jathi aliyanumna reservation irukkanum

      Delete
  24. No concessions have not been given for the reservation category in the selection of police. Govt has not ready to comprise the children education. It is the eligibility test only . Govt follows reservations in appointment.. If reservations is allowed in tet. It should be followed in first tet itself. Otherwise it will lead more confuse.

    ReplyDelete
    Replies
    1. k. appointment la reservation kudukalam, but athula thevaiyana teachers sc, st la kidaikalana antha posting a enna pannuvanga....? vacancy a apdiye vachurupangala, sc,st vacancy a vera caste teachers a vachu fill pannniruvangala..? vacancy a apdiye vachuruntha epdi students padipanga..............! avanga placela vera caste teachers a posting pota sc, st's enna pannuvanga, future le mel jaathila irukuravanga mattum thaan posting la irupanga.

      Delete
  25. Dmk vote vanga plan panranga pls dont belive kalainar speech so all tet candidate put noto

    ReplyDelete
  26. We are teachers think correctly we create a new world its a wonderful job u get today tomorrow or next dont worry hard work never fails any have friends we apply all the exams now at the time tnpsc announced group 1

    ReplyDelete
  27. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  28. sorry ethavathu thappa na comment panni irunda ennai manichurunga frnds(above comment) sorry sorry na yaraium kastapadutha comment panala pls undrstood

    ReplyDelete
  29. Last year enga iruntharkal ivarkal........

    ReplyDelete
  30. SINGAM KALAM IRANKIDUCHU APPURAMENNA ANNASAMADIMUNNADIYO PERIYARSAMADI MUNNADIYO FIFTEEN TO THIRTY MINUTES UNNVIRADAM IRUKAVENDIYATHUDAN. SAMUGANEEDI KAPPATRAPADUM.

    ReplyDelete
  31. Hai friends reservation is Soul of recruitment.if reservatiion not follow in tet why trb is following reservation in pg trb and tnpsc exam.dear friends please assemple oneday for meet our cm in kodanadu.those who are willing give your contacts number here.shall we sent petition to cm cell first.after that all CV attend candiate can ask appoinment to see our workshipe cm.

    ReplyDelete
    Replies
    1. hello friend there is no reservation in qualifing marks but appoiment ku kandipa undu

      Delete
  32. evarukku (kalainar) vera velai ellaiya.
    erukkura tension patthathunu etha vera kelappi viduraru.vote vanga vera vazhi ellaiya

    ReplyDelete
  33. pesama seniority base le Bt SgPg post potta nalla irukkum. ithuku yaravathu case potta nalla irukkum.

    ReplyDelete
    Replies
    1. yenpaa... ne romba kalama wait panra pola iruke... youth ku vazhi vidunga...

      Delete
    2. 50-50kudunga youth.athu pothum.

      Delete
  34. B.A english படித்திருந்தாலும் தமிழ் முன்னுரிமை சான்றிதழ் வேண்டுமா??? pls anyone clear my doubt

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி