தமிழகம் 100% கல்வியறிவு பெற்ற மாநிலமாக மாறும் : முதல்வர் உறுதி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 3, 2014

தமிழகம் 100% கல்வியறிவு பெற்ற மாநிலமாக மாறும் : முதல்வர் உறுதி


தமிழகம் விரைவில் 100 சதவீதம் கல்வியறிவு பெற்ற மாநிலமாக மாறும் என்று தமிழக சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் ஜெயலலிதா உறுதி அளித்தார்.தமிழக சட்டப்பேரவையின் இறுதி நாள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முதல்வர்,
பள்ளிக் கல்வியில் பல புதிய திட்டங்களை செயல்படுத்தி வருவதன் காரணமாகவும், மேல்நிலை வகுப்புகளில் இடை நிற்றலைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதன் காரணமாகவும், பத்தாம் வகுப்பு பயின்றவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.

2010-2011 ஆம் ஆண்டு 8 லட்சத்து 38 ஆயிரத்து 165 என்று இருந்த பத்தாம் வகுப்பு மாணவ மாணவியரின் எண்ணிக்கை, 2013-2014 ஆம்ஆண்டு 11 லட்சத்து 40 ஆயிரமாக உயர்ந்துள்ளது. பன்னிரண்டாம் வகுப்பை பொறுத்த வரையில், 2010-2011 ஆம் ஆண்டு 7 லட்சத்து 16 ஆயிரத்து543 என்று இருந்த எண்ணிக்கை; 2013-2014 ஆம் ஆண்டில் 8 லட்சத்து 40 ஆயிரமாக உயர்ந்துள்ளது.தேர்ச்சி விகிதத்தை எடுத்துக் கொண்டால், 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற பத்தாம்வகுப்பு பொதுத் தேர்வில் 85.3 விழுக்காடு என்றிருந்த தேர்ச்சி விகிதம், 2013 ஆம் ஆண்டு 89 விழுக்காடாக உயர்ந்துள்ளது. இதே போன்று, 2011ஆம் ஆண்டு நடைபெற்ற பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 85.9 விழுக்காடாக இருந்த தேர்ச்சி விகிதம், 2013 ஆம் ஆண்டு 88.1 விழுக்காடாக உயர்ந்துள்ளது.

உயர் கல்வியை எடுத்துக் கொண்டால், திருச்சி, தேனி, தர்மபுரி மற்றும் தஞ்சாவூர்மாவட்டங்களில் பு தாக அரசு பொறியியல் கல்லூரிகள் துவக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு முழுவதும் இதுவரை 11 பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகள் துவங்கப்பட்டுள்ளன. 24 பல்கலைக்கழக உறுப்புக் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் 12 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் துவங்கப்பட்டுள்ளன. திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கத்தில் தேசிய சட்டப் பள்ளி துவங்கப்பட்டுள்ளது.

கல்லூரிகளின் உட்கட்டமைப்பு வசதிக்கென 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. கல்லூரிகளில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர் பணியிடங்கள், இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் நிரப்பப்பட்டு வருகின்றன. மொத்தத்தில் ஒரு கல்விப் புரட்சியை தமிழ்நாட்டில் ஏற்படுத் இருக்கிறோம். விரைவில் 100 விழுக்காடு கல்வி அறிவு பெற்ற மாநிலமாக தமிழகம் திகழும் என்பதை மிகுந்த பெருமிதத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.

21 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. ya sure. How many vacancies for secondary grade teachers. official la announce panitangala?

      Delete
    3. ஆசிரியர் தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் நிரப்பினால் தான் உண்மையாக ,திறமையான ஆசிரியர்கள் கிடைப்பார்கள் எதிர்கால மாணவர்களின் கல்வித்தரம் உயரும் நன்றி.
      +2 , B.A /B.Sc ,& B.Eட் மதிப்பெண்களை கருத்தில் கொள்ளாமல் ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெணை மட்டும் வைத்து தேர்வு செய்ய வேண்டுமாய் பணிவோடு மாண்புமிகு அம்மா அவர்களையும் , மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களையும், மதிப்புமிகு பள்ளிக்கல்வித்துறை முதன்மைச்செயலர் அவர்களையும் வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறோம்

      Delete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. Sir my wg 79 tet mark101 paper1 dob 20/6/1987 any chance iwill get job


    ReplyDelete
  5. Sir my wg 79 tet mark101 paper1 dob 20/6/1987 any chance iwill get job


    ReplyDelete
  6. 55% for pass in TET amma anonsed ???

    ReplyDelete
  7. AMMA ANNOUNCED 55 % FOR IDAOTHEEKEEDU PERSON

    ReplyDelete
  8. S. Its true news our cm hv gvn 5% mark concession for mbc, bc, bcm, sc, st. Sethu poidalamnu thonuthu frnds enala idha thankikave mudiyala.

    ReplyDelete
    Replies
    1. s apdithan iruku ,sane feeling posting ku innum 4 months romba avamanama iruku

      Delete
  9. Mp election varuthu kanna so enna vena nadakkalam. Arasiyalla ithellam satharanam pa.

    ReplyDelete
  10. Mp election varuthu kanna so enna vena nadakkalam. Arasiyalla ithellam satharanam pa.

    ReplyDelete
  11. ram naarayanan sir below 60% ku weitage 36 eanpathu conform ah. rly pls. my no 9842437071

    ReplyDelete
  12. when will d final list released by trb? if any one knows pls inform....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி