தமிழகத்தில் 1,851 பள்ளிகளில் புதிய வகுப்பறைகள். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 16, 2014

தமிழகத்தில் 1,851 பள்ளிகளில் புதிய வகுப்பறைகள்.


தமிழகத்தில் 1,851 பள்ளிகளில், புதிய வகுப்பறைகள் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தில்,

மத்திய-மாநில அரசுகளின் பங்களிப்புடன் அரசு பள்ளிகளுக்கு கூடுதல் வகுப்பறைகள், ஆய்வுக்கூடங்கள் கட்டுவதற்கு, நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. கடந்த 2010-11ல் பள்ளிதகவல் மேலாண்மை அறிக்கையின் படி, ஒவ்வொரு பள்ளிக்கும் தேவையான வகுப்பறைகள் கட்டுவதற்கு, அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

இதன்படி, தமிழகத்தில் 1,851 உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் புதிய வகுப்பறைகள்; 698 ஆய்வகங்கள் கட்டுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.இதுவரை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மேற்பார்வையில், கட்டடங்கள் கட்டப்பட்டு வந்தன. இனி, "பொதுப் பணித்துறைக்கு நிதி வழங்கப்பட்டு, புதிய வகுப்பறைகள் கட்டப்படும்" என அனைவருக்கும் இடைநிலை கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி