தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் பிப்.25, 26-இல் வேலைநிறுத்தம - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 20, 2014

தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் பிப்.25, 26-இல் வேலைநிறுத்தம


ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் வருகிற 25, 26-ஆம் தேதிகளில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவர் என்று, தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி தெரிவித்துள்ளது.

அமைப்பின் நாமக்கல் மாவட்ட பொதுக் குழுக் கூட்டம் அதன் மாவட்டத் தலைவர் வே.அண்ணாதுரை தலைமையில் நாமக்கல்லில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.மாவட்ட துணைச் செயலர் பெ.சரவணக்குமார் முன்னிலை வகித்தார்.

*மத்திய அரசுக்கு இணையாக தமிழக அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டும்;

*பங்களிப்பு ஓய்வூதியத்தை ரத்து செய்ய வேண்டும்;

*அனைத்து நடுநிலைப் பள்ளிகளிலும் தமிழாசிரியர், வரலாறு பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்;

*ஆசிரியர் தகுதித் தேர்வை ரத்து செய்ய வேண்டும்;

*பகுதிநேர சிறப்பாசிரியர்களை முழுநேர ஆசிரியர்களாக நிலை உயர்த்த வேண்டும்;

*கல்வித் துறை அலுவலக காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்

என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநில அளவில் வருகிற 25-ஆம் தேதி கருப்புப் பட்டை, கோரிக்கை அட்டை அணிந்து பள்ளி உள்ளிருப்பு போராட்டமும், 26-ஆம் தேதி ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்திலும் ஈடுபடுவதென முடிவு செய்யப்பட்டது.

இதேபோல,

* பதவி உயர்வுக்காக காத்திருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு உடனடியாக பதவி உயர்வு வழங்க வேண்டும்;

*ஆசிரியர் பயிற்சித் தேர்வில் தேர்ச்சி பெற்று பணி நியமனத்துக்காக காத்திருப்போருக்கு உடனடியாக ஆசிரியர் பணி வழங்க வேண்டும்

என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நாமக்கல் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகம் முன் மார்ச் 2-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது.

ஆசிரியர்கள் கூட்டணி மாவட்டச் செயலர் ஆர்.நடேசன், மாவட்டப் பொருளாளர் கு.சேகர், வட்டாரச் செயலர்கள் ஆர்.முத்துக்குமார், த.பிரபு, து.ராமராஜ்உள்ளிட்டோர் பங்கேற்றனர்.சேந்தமங்கலம் வட்டாரத் தலைவர் சி.துரைசாமி வரவேற்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி