SPECIAL TET: பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு 40 நாள் இலவச டி.இ.டி., தேர்வு பயிற்சி. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 14, 2014

SPECIAL TET: பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு 40 நாள் இலவச டி.இ.டி., தேர்வு பயிற்சி.


பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு, 40 நாள், இலவச ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,) குறித்து பயிற்சி அளிக்க, தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. இதற்கு, நாளை முதல்,

20ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதுகுறித்து, மாநில ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி பயிற்சி நிறுவன இயக்குனர், கண்ணப்பன் கூறியதாவது: பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு, டி.இ.டி., தேர்வு குறித்து, இலவசமாக சிறப்பு பயிற்சி அளிக்க, ஏற்கனவே, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த பயிற்சி, வரும், 22ல் துவங்கி, 40 நாட்களுக்கு, அனைத்து மாவட்டங்களிலும் நடக்கும். மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனங்கள் மூலம், இந்த பயிற்சி அளிக்கப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும், தேர்வு எழுத உள்ள பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள், பயிற்சியில் பங்கேற்க, தங்கள் விவரங்களை, 14ம் தேதியில் இருந்து, 20ம் தேதிக்குள், அந்தந்த மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் மூலம், பதிவு செய்து கொள்ள வேண்டும்.பதிவுகளின் அடிப்படையில், தேவையான பயிற்சி மையங்கள் அமைக்கப்படும். 50 பேருக்கு, ஒரு பயிற்சி மையம் அமைக்க, திட்டமிடப்பட்டு உள்ளது. குறைவான நபர்கள் இருந்தால், வேறொரு மையத்துடன், அவர்களை இணைத்து, பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி மையம் குறித்த விவரங்களை, மாவட்ட ஆசிரியர் கல்வி நிறுவன முதல்வரிடம் கேட்டு, தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு, இயக்குனர் தெரிவித்தார்.

3 comments:

  1. I am arun ph candidate(ortho).Intha special tet exam blind candidates kku mattuma ella ph(ortho) kkum unda therincha sollunga frnds pls reply me.

    ReplyDelete
  2. Whether the govt is going to conduct special test or 5 % relaxation or both for differently able person

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி