டிஎன்பிஎஸ்சி குரூப்4 தேர்வு எழுதி ஆறு மாதமாகியும் ரிசல்ட் இன்னும் வெளியாகவில்லை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 24, 2014

டிஎன்பிஎஸ்சி குரூப்4 தேர்வு எழுதி ஆறு மாதமாகியும் ரிசல்ட் இன்னும் வெளியாகவில்லை.


தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் குரூப்4ல், 5,566 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு, கடந்த ஆகஸ்ட் 25ம் தேதி நடந்தது. இத்தேர்வை மாநிலம் முழுவதும் சுமார் 12 லட்சம் பேர் எழுதினர்.
கல்வி தகுதி 10ம் வகுப்பு தேர்ச்சி என்ற போதிலும், ஏராளமான பட்டதாரிகளும் தேர்வை எழுதினர். தேர்வு நடைபெற்ற போது, மையத்தை பார்வையிட்ட டிஎன்பிஎஸ்சி தலைவர் நவநீதகிருஷ்ணன் 3 மாதத்தில் தேர்வுக்கான ரிசல்ட் வெளியிடப்படும் என்று கூறினார். குறிப்பாக விடைத்தாள் திருத்தும் பணி 95 சதவீதம் முடிந்துவிட்டதாகவும் அவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தெரிவித்தார்.

ஆனால், தேர்வு முடிவு வெளியிடப்படுவதற்கான அறிகுறியே தென்படவில்லை.டிஎன்பிஎஸ்சி குரூப்4 தேர்வு முடிவுகளை, இன்னும் ஒரு வாரத்தில் வெளியிடப்படவில்லை என்றால், மார்ச் முதல் வாரத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிப்பு வெளியாகி விடும். அந்த நேரத்தில் அதிகாரிகள் தேர்தல் பணியில் முழு கவனத்தை செலுத்த தொடங்கி விடுவார்கள். இதனால் தேர்வு முடிவு வெளியிடுவதில் மேலும் காலதாமதம் ஏற்படும் நிலை ஏற்பட்டு விடும். எனவே விரைவில் தேர்வு முடிவை வெளியிட வேண்டும் என்று தேர்வு எழுதியவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் கூறுகையில், ‘ஒளிவு மறைவின்றி நியாயமான முறையில் தேர்வு முடிவை வெளியிட வேண்டும் என்பதில் டிஎன்பிஎஸ்சி உறுதியாக உள்ளது. பிரச்னை ஏதுவும் ஏற்படாமல் இருக்க தேர்வு எழுதியவர்கள் அனைவரின் மதிப்பெண்களையும் தேர்வாணைய இணைய தளத்தில் வெளியிடவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதுவே காலதாமதம் ஏற்படுவதற்கான காரணம். இந்த பணி அனைத்தும் முடிந்த பின்னர் தேர்வு முடிவு வெளியிடப்படும் என்றார்.

10 comments:

  1. அ.தி.மு.க. அரசு இதுபோன்ற நிறைய தேர்வுகள் வைத்து விளம்பரம் தேடிகொள்கிறதே தவிர போஸ்டிங் போட வக்கில்லை. எல்லாம் focus.

    ReplyDelete
    Replies
    1. மிகச் சரியாக சொன்னீர்கள்

      Delete
  2. Group4,group3,group2(Interview posts) results? ??????????????????????????????????????

    ReplyDelete
  3. நவநீதகிருஷ்ணன் அவருக்கு பட்டை போட்டுக்கொல்வதொடு மட்டுமல்லாமல் எல்லோருக்கும் நாமத்தை போடுகிறார்.

    ReplyDelete
  4. தேர்தல் விளம்பரம் தேடுவதற்காக உள்நோக்கத்தோடு தேர்வு முடிவை காலதாமதப்படுத்துகிறார்கள்

    ReplyDelete
  5. தேர்தல் விளம்பரம் தேடுவதற்காக உள்நோக்கத்தோடு தேர்வு முடிவை காலதாமதப்படுத்துகிறார்கள்

    ReplyDelete
  6. Useless navaneetha krishnan, Nataraj period is golden period, he was released the results (10 lakhs written examination) within two months

    ReplyDelete
  7. Sir, highcourt typist exam 2014answer key and expected cut off therinjavanga pls sollunga....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி