சூரிய குடும்பத்திற்கு வெளியே புதிய 715 கோள்கள்: நாசா கண்டுபிடிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 28, 2014

சூரிய குடும்பத்திற்கு வெளியே புதிய 715 கோள்கள்: நாசா கண்டுபிடிப்பு


சூரிய குடும்பத்திற்கு வெலியே புதியதாக 715 கோள்கள் உள்ளதை நாசா கண்டுபிடித்துள்ளது. நாசாவின் கெப்ளர் தொலை நோக்கி இதனை கண்டுபிடித்துள்ளது என்று நாசா தெரிவித்துள்ளது.
நமது சூரிய குடும்பத்திற்கு வெளியே வளங்கள் நிறைந்த புதியதாக 715 கோள்களும், 300க்கும் மேற்பட்ட வெவேறான நட்சத்திரங்களும் சுற்றி வருகின்றன என்று நாசா தனது ஆராய்ச்சியில் தெரிவித்துள்ளது. நாசா இதில் நான்கு கோள்களில் மக்கள் வசிக்க சாத்தியமுள்ள கூறுகள் உள்ளது என்றும் நாசா தெரிவித்துள்ளது.இந்த புதிய கண்டுபிடிப்பால் கிட்டதட்ட இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட கிரகங்களின் எண்ணிக்கை 1715 ஆக உயர்ந்துள்ளது.

முதல் கிரகம் 1995ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே 1000 கிரங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன. மனிதர்கள் வசிக்கும் தகுதி வாய்ந்த பூமியை போன்ற கிரகங்களை கெப்லர் கண்டுபிடித்து தகவல் அனுப்புகிறது.கண்டுபிடிக்கப்பட்ட கோள்களில் 95 சதவீத கோள்கள் பூமியைவிட பரப்பளவில் பெரியதாகவும், மனிதர்கள் வாழ்வதற்கு தேவையான தண்ணீர், நிலப்பகுதி ஆகியவற்றை கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி