பத்தாம் வகுப்பு செய்முறைத் தேர்வு: மார்ச் 7-ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 27, 2014

பத்தாம் வகுப்பு செய்முறைத் தேர்வு: மார்ச் 7-ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க உத்தரவு.


பத்தாம் வகுப்பு செய்முறைத் தேர்வு தமிழகம் முழுவதும் புதன்கிழமை (பிப்.26)தொடங்கியது.இந்தத் தேர்வை மார்ச் 7-ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.
சமச்சீர் பாடத்திட்டத்தின் கீழ் பத்தாம் வகுப்பு அறிவியல் பாடத்தில் அனைத்து மாணவர்களுக்கும் செய்முறைத் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி, அறிவியல்பாடத்தில் எழுத்துத் தேர்வுக்கு 75 மதிப்பெண்ணும், செய்முறைத் தேர்வுக்கு 25 மதிப்பெண்ணும் வழங்கப்படுகிறது.பத்தாம் வகுப்புத் தேர்வை எழுதும் 11 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் செய்முறைத் தேர்வில் இந்த ஆண்டு பங்கேற்கின்றனர்.

இவர்கள் அனைவருக்கும் மார்ச் 7-ஆம் தேதிக்குள் செய்முறைத் தேர்வை நடத்தும் வகையில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கால அட்டவணையைத் தயாரித்துள்ளனர்.செய்முறைத் தேர்வுக்கு பிற பள்ளி ஆசிரியர்கள் தேர்வுக் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட வேண்டும்.எனவே, ஒவ்வொரு மாவட்டத்திலும் பள்ளிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி