புத்தக தானத்தால் உருவான நூலகம்: புதுச்சேரி அரசுப் பள்ளியின் முன்மாதிரி முயற்சி... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 14, 2014

புத்தக தானத்தால் உருவான நூலகம்: புதுச்சேரி அரசுப் பள்ளியின் முன்மாதிரி முயற்சி...


புதுச்சேரி அருகேயுள்ள ஆண்டியார்பாளையம் அரசு தொடக்கப்பள்ளியில் மக்கள் அளித்தபுத்தகங்களின் உதவியால் ஆசிரியர்கள் உருவாக்கியுள்ள நூலகம்.

புதுச்சேரியில் பொதுமக்கள் அளித்த நன்கொடை புத்தகங் களின் உதவியால் அரசுப் பள்ளி யில் நூலகத்தைப் பள்ளியின் ஆசிரியர்கள் உருவாக்கியுள்ளனர்.

புதுச்சேரி அருகேயுள்ள ஆண்டியார்பாளையத்தில் அரசு தொடக்கப்பள்ளி அமைந் துள்ளது.இந்தப் பள்ளியின் மேலாண்மை குழுவின் கூட்டம் சமீபத்தில் நடத்தப்பட்டது. அப்போதுபள்ளிக்காக நூலகம் கேட்டு அரசிடம் விண்ணப்பிப்பதை விட நாமே ஒரு நூலகம் அமைக்கலாம் என தீர்மானத்தினர். இந்நூலகத்தை மக்கள் பங்களிப்புடன் அமைக்க திட்டமிட்டனர்.இதையடுத்து ‘கற்போம், பகிர் வோம்’ என்ற வாசகத்துடன் பள்ளி தலைமையாசிரியர் ஆறுமுகம், நூலகப் பொறுப்பாளர் பாட்ஷா ஆகியோர் மக்களை நாடத் தொடங்கினர்.

இதில்வெற்றியும் பெற்றுள்ளனர்.இதுதொடர்பாக அவர்கள் கூறிய தாவது:எதிர்கால சந்ததிகள் பயன் பெறும் வகையில் தாங்கள் படித்த புத்தகங்களை தானமாக வழங்குங் கள் என கேட்டு நோட்டீஸ் தயாரித்தோம். கிராம மக்களிடம் நோட்டீஸ் விநி யோகிக்கப்பட்டது.பள்ளியின் மாணவர்கள், முன்னாள் மாணவர்கள் என பலரும் தாங்கள் படித்த பயனுள்ள புத்தகங்களைத் தாங்களாகவே முன்வந்து தந்தனர்.மக்கள் மூலம் 900 புத்தகங்கள் கிடைத்தன.

பள்ளியின் ஒரு அறையை நூலகமாக மாற்றி திறந்துள்ளோம். அறிவியல், கணிதம், வரலாறு, தேசத் தலைவர்களின் புத்தகங்கள் என அனைத்து தரப்பு புத்தகங்களும் இந்நூலகத்தில் உள்ளன.தொடக்கப்பள்ளி மாணவர் களிடம் வாசிப்பு பழக்கத்தை உரு வாக்கவும், நூல்கள் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தவே நூலகத்தை அமைத்தோம்.முன்மாதிரி நூலகம் தொடர்பாக கேள்வியுற்ற கல்வித்துறை இயக்குநர் வல்லவன் நேரில்பார்வையிட்டு வாழ்த்துகள் தெரி வித்துள்ளார்.புதுச்சேரி அருகேயுள்ள ஆண்டியார்பாளையம் அரசு தொடக்கப்பள்ளியில் மக்கள் அளித்தபுத்தகங்களின் உதவியால் ஆசிரியர்கள் உருவாக்கியுள்ள நூலகம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி