உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களை டி.இ.ஓ.,வாக நியமிக்க வலியுறுத்தல். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 6, 2014

உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களை டி.இ.ஓ.,வாக நியமிக்க வலியுறுத்தல்.


மாவட்ட கல்வி அலுவலர் பணிக்கு, (டி.இ.ஓ.,), உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களை நியமிக்க வேண்டுமென, அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தமிழகத்திலுள்ள 50க்கும் மேற்பட்ட மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்களில், 25 சதவீதம் நேரடி தேர்வு மூலமும், 75 சதவீதம் தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு மூலம் நிரப்பப்படுகிறது. கடந்த காலங்களில் 75 சதவீதம், அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களால் நிரப்பப்பட்டன. அதில், தற்போது 40 சதவீதம் அரசு உயர்நிலைப்பள்ளி, 35 சதவீதம் அரசு மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களை கொண்டு நிரப்பப்படுகிறது.மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், மாவட்ட கல்வி அலுவலர்களுக்குரிய சம்பளம் பெறுகின்றனர்.

புதிய அரசாணையை ரத்து செய்து, உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களை, மாவட்ட கல்வி அலுவலராக நியமித்தால்தான், பயனுள்ளதாக இருக்கும் என, தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்க நிர்வாகி முத்துச்சாமி கூறினார்.அவர் கூறுகையில், "மாவட்ட கல்வி அலுவலர் பணிக்கு, மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் நியமிப்பதால், அவர்களுக்குபயனில்லை. பதவி உயர்வு பெற்ற சில மாதங்களில், ஓய்வு பெறுகின்றனர். இதனால், மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், மாவட்ட கல்வி அலுவலராக, பதவி ஏற்க மறுக்கின்றனர். எனவே, உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களை, மாவட்ட கல்வி அலுவலராக நியமிக்கும், பழைய முறையை மீண்டும் அமல்படுத்த வேண்டும், என்றார்.

1 comment:

  1. DEO exam eappo callper pannuvanga. please anybody reply me.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி