பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு நடக்குமா? கானல் நீராகுமா? கை கொடுக்குமா ஆசிரியர் சங்கங்கள்? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 11, 2014

பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு நடக்குமா? கானல் நீராகுமா? கை கொடுக்குமா ஆசிரியர் சங்கங்கள்?


தொடக்கக் கல்வி துறையில் கடந்த 2013 மே ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு நடந்தது .இக் கலந்தாய்வில் நடு நிலை நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், தொடக்க பள்ளி தலைமையாசிரியர்கள்,
போன்ற பதவி உயர்வுவழங்கப்பட்டன .

இதில் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டது ஏன்னென்றால் தொடக்கக் கல்வி இயக்குநர் 11.05.2013 அன்று அவர் வெளியிட்ட கலந்தாய்வு செயல் முறையில் இரட்டைப் பட்டம் வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில்உள்ளதால் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு மேற்கொள்ள கூடாது என குறிப்பிட்டிருந்தார்.மேலும் அதே தொடக்கக் கல்வி இயக்குநர் 30.08.2013 அன்று வெளியிட்ட கலந்தாய்வு செயல் முறையிலும் அதே காரணம் காட்டி பதவி உயர்வு கண்டிப்பாக மேற்கொள்ள கூடாது என குறிப்பிட்டிருந்தார்.

தற்போது வழக்கு முடிவுற்ற நிலையில் இது வரை பதவிஉயர்வு கலந்தாய்வு நடத்துவதற்கான அறிகுறிகள் இல்லாமல் இருக்கிறது.இதனால் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு மற்றும் மாவட்ட மாறுதல்எதிர் நோக்கி உள்ள ஆசிரியர் நண்பர்கள் மிகுந்த மன உளச்சலுக்கு ஆளாகி உள்ளனர்.பள்ளி கல்வி துறையை போல் அல்லாமல் தொடக்கக் கல்வி துறையில் இருக்கும் இந்த பதவி உயர்வு வாய்ப்பும் கிடைக்காமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் ஆசிரியர்கள் உள்ளனர்.மேலும் நாடாள மன்ற தேர்தல் தேதி அறிவிக்க சில நாட்களே உள்ள நிலையில் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு நடக்குமா ? கானல்நீராகுமா ? என்ற அச்சத்தில் ஆசிரியர்கள் உள்ளனர்.

எனவே ஆசிரியர்கள் அனைவரும் மாறுதல் கலந்தாய்வு மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு ஏற்பாடு செய்ய அனைத்து ஆசிரியர் சங்க பொறுப்பாளர்களை தொடர்பு கொண்டு வண்ணம் உள்ளனர் .எனவே ஆசிரியர்களின் மன குமுறல்களை அறிந்து அவர்களின் வாழ்வில் ஒளி ஏற்ற அனைத்து ஆசிரியர் சங்ககள் ஒன்றினைந்து செய்து தருவார்கள் என்ற நம்பிகையில் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

இவண் - பதவி உயர்வுக்காக காத்து கொண்டுள்ள ஆசிரியர் நண்பர்கள்.

5 comments:

  1. we have been waiting for this. plz take steps

    ReplyDelete
  2. Most of teachers who are affiliated with federation have been completed the one sitting course. Then, How can they claim our govt to promotion counseling??? Never.....

    ReplyDelete
  3. S thats correct .they wont do favour.God alone can help us

    ReplyDelete
  4. S. GOD WILL HELP US THROUGH OUR HONORABLE C.M. WITHIN ANNOUNCEMENT OF ELECTION DATE.

    ReplyDelete
  5. I think, God also has completed (bought) his degree in one sitting. So, he couldn't recommend for us.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி