ஆசிரியர் தகுதி தேர்வில் தனியார் பள்ளி ஆசிரியர்கள் அதிகளவில் தேர்ச்சி. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 14, 2014

ஆசிரியர் தகுதி தேர்வில் தனியார் பள்ளி ஆசிரியர்கள் அதிகளவில் தேர்ச்சி.


ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி விகிதம் குறைந்ததால் தனி யார் பள்ளிகளில் பணியாற் றிய பெரும்பாலான ஆசிரியர்கள் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதனால் தனியார் பள்ளி நிர்வாகத்தினர்

தங்களின் மாணவர் சேர்க்கை பாதிக் குமோ என்ற கலக்கத் தில் உள்ள னர்.

தமிழகத்தில் 2012-13ம் ஆண்டிற்கான ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களில் அரசு தொடக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 21,737 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.இந்நிலையில் கடந்த வாரம் ஆசிரியர் தகுதித்தேர்வின் தேர்ச்சி விகி தத்தை 55 சதவீதம் குறைப்பதாக தமி ழக அரசு அறிவித்தது. இத னால் தேர் வெழுதி தகுதி பெறாத 30 ஆயிரம் ஆசிரியர்களுக்கு தகுதி பெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.ஆசிரியர் தகுதித்தேர் வில் தேர்ச்சி விகிதத்தில் தளர்வு செய்ததால் தனியார் பள்ளிகளில் தற்போது பணியாற்றி வரும் பெரும்பாலான ஆசிரியர்கள் இந்த தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.இவர்களுக்கு அரசு பள்ளிகளில் ஆசிரியர்களாக பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். எனவே பணி நியமனத்திற்கு பிறகு அரசுப் பள்ளிகளுக்கு பணியில் சேர்ந்து விடுவார் கள்.

ஆசிரியர்களின் இந்த பணி மாறுதலால் பொதுத்தேர் வை சந்திக்கவுள்ள 10,12ம் வகுப்பு படிக்கும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.பள்ளியின் தரத்தை உயர்த்தவும், பொதுத்தேர் வில் மாணவர்களை அதிக மதிப்பெண் பெறுவதற்கு தனியார் பள்ளிகள் ஆண்டு முழுவதும் தீவிர முயற்சி எடுக்கின்றன.அடுத்த மாதம் பொதுத்தேர்வுகள் நடைபெறவுள்ள சூழலில் ஆசிரியர்களின் பணி நியமனம் தனியார் பள்ளிகளுக்கிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தனியார் பள்ளி நிர்வாகி கள் மாணவர்க ளின் தேர்ச்சி விகிதத்திலும், அதிக மதிப்பெண் பெருவ தில் பாதிப்பும் ஏற்பட்டுவிடுமோ என்று எண்ணி வருகின்றனர்.மேலும், தனியார் பள்ளிகளில் பணிபுரிந்த ஆசிரியர்கள் அரசுப்பள்ளிகளில் சேரும்போது இங்குள்ள தரம் அரசுப்பள்ளிகளி லேயே கிடைக்கும் சூழலும் ஏற்படுவதால் பெற்றோர் மனநிலை மாறிவிடுமோ என்ற அச்சமும் தனியார் பள்ளிகளுக்கு ஏற்பட்டுள் ளது.

இதனால் வரும் கல்வியாண்டில் சேர்க்கை விகிதம் பாதிக்குமோ என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது. தனியார் பள்ளிகள் அதிக மதிப்பெண்ணையும் சிறந்த பயிற்சி பெற்ற ஆசிரியர் களையும் வைத்து ஆண்டுதோறும் மாணவர் சேர்க்கையில் ஈடுபட்டனர்.தற் போது தனியார் பள்ளி ஆசிரியர்கள் பெருமளவு அரசுப்பள்ளிகளில் சேர்வ தால் தனியார் பள்ளிகளு க்கு சிறிதளவு பாதிப்பு ஏற்படலாம் என்று கல்வியாளர்கள் கூறுகின்றனர்.

17 comments:

  1. Please stop this type of irrelevent, irresponsible and idiotic type of news.For your sales you are making false news among the people and making money.But the people who are working hard are really suffering.
    Why do you worry about private schools in the Govt teachers post? Is this a first time teachers are moving from private to Govt?
    Foolishness to the core?

    ReplyDelete
    Replies
    1. kalviyalargal who? First of all they should think about the salary for the private school teachers. (5,000,6000 etc.,) Eventhough they are getting this salary they produce a very good result. KALVIYALARGAL should asked to raise the salary of the private school teachers. govt. fix the school fees at the same time they should fix the teachers salary. Even old paper man earn 10,000 per month. The private school teachers should start union then only there will be a way. God only guide them.Sorry, this is my opinion.

      Delete
  2. Tet mattrum weight age markinal baathikka pattor palaeper irukkalam. Tetal ippo indha varusam bed muditha pala per aadhayam adainthirukalam.
    Aanal tet in unmaiyana vetri idhuve....quality onraiye edhirparthu makkal private schoolku pogirargal. Andha quality gov school il kidaithal, gov schoolil seat kidaikkavillai endral private school Ku pora Mela varum. Elai kudumvangalin kulandhaigalukum niraivana kalvi uyarvana tharathil kidaikum.
    Kulandhaigalin edhirkalathai peridhaga ennum petrorgalin manadhai mattume mooladhanamaga kondu pilaikkum private school management..

    Be careful

    ReplyDelete
  3. 2 வருசமா படிச்ச பிள்ளைங்க கடைசியா இன்னும் 15 நாட்களில் பரிட்சை எழுத போறவங்க மார்க் கம்மியா எடுப்பாங்க.யார் காதுல பூ சுத்துரீங்க.அப்போ இவ்ளோ நாளா தொண்டை தண்ணி வத்தி போக சொல்லித்தந்த ஆசிரியர் எதுமே சொல்லிதரலேன்னு சொல்றீங்களா.500 ரூபா சம்பளம் சேத்து கேட்டா பிட்சைகாரண விரட்டற மாதிரி போ போ அடுத்த மாசம் பாக்கலாம்னு துரத்தி அடிப்பீங்க.இப்போதான் திறமையான ஆசிரியர் அருமை புரியுதுங்களா உங்களுக்கு?

    ReplyDelete
  4. ஏப்பா உங்களுக்கு வேற வேலை ஏதும் இல்லையா.
    உங்க வீட்டுக்காரம்மா தினமும்
    வேற வேலை இருந்தா பாருங்கம்பாப்பா

    ReplyDelete
  5. ஏப்பா உங்களுக்கு வேற வேலை ஏதும் இல்லையா.
    உங்க வீட்டுக்காரம்மா தினமும்
    வேற வேலை இருந்தா பாருங்கம்பாப்பா

    ReplyDelete
  6. please contact tntet2012 candidate for further acton cell 9842366268 email:saravanan01975@gmail.com

    ReplyDelete
  7. அப்போ தனியார் பள்ளியின் ஆசிரியர் அதிகம் தேர்ச்சிக்கு ஷாக் ஆகறீங்க.
    வேற யாரு பாஸ் ஆகனுன்னு நினைக்கறீங்க.
    டீச்சருக்கு படிச்சு தனியார் பள்ளியிலோ, அரசு பள்ளியிலோ தானே வேலையில் இருப்பாங்க. இதை தவிர வேறு யாரு அதிகம் பாஸ் பண்ணா ஒத்துக்குவீங்க.
    எனக்கு தெரிந்து..... ஆசிரியரை வகுப்பிற்காக பயன்படுத்துவதை விட வேலைக்காக பயன்படுத்துவதே அதிகம் . (test, study, paper correction, etc.)

    ReplyDelete
  8. addey ithukutha oorla vetty pasanga venungradha..avanunga soldranunganu nampitom pathinkala vela vetty illana ippaditha

    ReplyDelete
  9. This comment has been removed by the author.

    ReplyDelete
  10. என்னைய இப்படி பண்றீங்க

    ReplyDelete
  11. A new case is filed against 5% reservation-puthiya thalaimurai news

    ReplyDelete
  12. Vrra velai illama statistics eduthangalakum Avanavan job illama kasu illama kastapatran

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி